காட்ட சாட்டமான பிரட் மசால்.. இப்படி ஒரு முறை செய்து பாருங்க!

ருசியான பிரட் மசால் செய்வது எப்படி என இங்க பார்க்கலாம்.

பொதுவாக பலருக்கு பிரட் என்றாலே பிடிப்பது இல்லை. காரணம் காய்ச்சல் வந்தவர்கள் மட்டுமே உண்ணும் உணவு போல் பிரெட் பார்க்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக பிரெட்டில் பல வகையான ருசியான உணவு வகைகள் தயாரிக்கப்படுகிறது. அந்த வகையில் ருசியான பிரட் மசால் செய்வது எப்படி என இங்கு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்

பிரெட்

கடுகு

சோம்பு

உளுந்தம்பருப்பு

கடலை பருப்பு

முந்திரிபருப்பு

இஞ்சி

பூண்டு

கறிவேப்பிலை

கொத்தமல்லி இலை

மஞ்சள்தூள்

மிளகாய் தூள்

கரம் மசாலா தூள்

உப்பு

வெங்காயம்

தக்காளி

பட்டாணி

காரட்

செய்முறை

முதலில் பிரெட்டை சதுர வடிவில் குட்டி குட்டியாக நறுக்கி எடுத்து வைத்து கொள்ள வேண்டும். ஒரு கடாயில் கொஞ்சமாக நெய் விட்டு பிரட்டை டோஸ்ட் செய்து எடுத்து கொள்ள வேண்டும்.

ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு சூடாக்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் சோம்பு சேர்க்க வேண்டும். அதில் ஒரு ஸ்பூன் கடலை பருப்பை சேர்க்க வேண்டும். ஒரு ஸ்பூன் கடுகு மற்றும் உளுத்தம்பருப்பை சேர்த்து தாளிக்க வேண்டும். அதில் ஒரு கைபிடி வரை முந்திரி பருப்பை சேர்த்து வறுக்க வேண்டும். கடுகு வெடித்த பிறகு அதில் நீள வாக்கில் வெட்டி வைத்த இரண்டு வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.

வெங்காயம் வதங்கிய பின் ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்டை சேர்த்து வதக்க வேண்டும். அதில் ஒரு தக்காளியை சேர்த்து வதக்க வேண்டும். பின்னர் ஒரு கை பிடி பச்சை பட்டாணியை சேர்த்து வதக்க வேண்டும். அதில் தேவையான அளவு உப்பை சேர்த்து கொள்ள வேண்டும். இதில் ஒரு ஸ்பூன் மிளகாய் தூள், அரை ஸ்பூன் கரம் மசாலா சேர்த்து கொள்ள வேண்டும். கால் ஸ்பூன் மஞ்சள் தூளையும் சேர்த்து இரண்டு நிமிடம் மூடி போட்டு மசாலா பச்சை வாடை போகும் வரை கலந்து விட வேண்டும். 

நன்றாக பட்டாணி வெந்த உடன் டோஸ்ட் செய்து வைத்த பிரெட்டை சேர்த்து கலந்து விட வேண்டும். கடைசியாக அதில் இரண்டு ஸ்பூன் பட்டரை கலந்து விட வேண்டும். அவ்வளவு தான் கடைசியாக பிரெட்டை ஒரு ஒரு பிளேட்டிற்கு மாற்றி மேலாக பொடியாக நறுக்கிய பச்சை வெங்காயத்தை இரண்டு ஸ்பூன் அளவு சேர்த்து விட வேண்டும். மேலான மல்லி இலைகளை தூவி பரிமாறினால் பிரெட் மசால் ரெடி. துருவிய காரட்டையும் சேர்த்தால் அருமையாக இருக்கும். இப்படி ஒரு முறை பிரெட் மசால் செய்து கொடுத்தால் உங்கள் வீட்டில் அடிக்கடி பிரெட் மசால் கேட்பார்கள்.

குறிப்பு

இதில் முந்திரிப்பருப்பை விருப்பம் உள்ளவர்கள் சேர்த்து கொள்ளலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *