காங்கிரஸ் எம்.பி தொடர்புடைய இடங்களில் நடந்த ரெய்டு… 300 கோடியை தாண்டிய ரொக்கம்! – சீண்டும் பாஜக |

இதனிடையே, பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டா தனது எக்ஸ் பக்கத்தில், “நீங்களும்(தீரஜ் சாஹு), உங்கள் தலைவர் ராகுல் காந்தியும் கண்டிப்பாக பதில் சொல்ல வேண்டும். இது புதிய இந்தியா. இங்கு ராஜ குடும்பம் என்ற பெயரில் மக்களை சுரண்ட முடியாது. சட்டம் தனது கடமையைச் செய்யும். ஊழலுக்கு காங்கிரஸ் உத்திரவாதம் என்றால், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைக்கு நரேந்திர மோடி உத்தரவாதம். மக்களின் பணம் திரும்பப்பெறப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட அறிக்கையில், “தீரஜ் சாஹூ தொழிலுக்கும் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை. அவருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகளவு பணம் பறிமுதல் செய்தது குறித்து அவர் தான் விளக்கம் அளிக்க முடியும். உரியப் பதிலை அவர் அளித்தாக வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *