களைகட்டிய மந்தை அம்மன் கோவில் திருவிழா..

தேனி
மாவட்டம் கூடலூரில் மிகவும் புகழ்பெற்ற மந்தை அம்மன் கோயில் திருவிழா விமர்சையாக நடைபெற்றது. கூடலூர் பகுதியில் ஆண்டிற்கு ஒரு முறை மந்தை அம்மன் கோவில் திருவிழா நடத்தப்படும்.

இந்த திருவிழாவிற்கு கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான பொதுமக்கள் வருகை புரிந்து கோயிலில் வழிபாடு செய்து செல்வது வழக்கம் . இரண்டு தினங்களாக கூடலூர் அரசமரம் அருகே உள்ள மந்தை அம்மன் கோயில் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் மந்தையம்மன் கோயில் திருவிழாவில் கூடலூர் பகுதி பொதுமக்கள் முளைப்பாரி எடுத்தும், பால் குடம் எடுத்தும், மாவிளக்கு எடுத்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவர்.

இன்றைய திருவிழா நாளில் பெண்கள் அதிகாலை முதலே மாவிளக்கு எடுத்து, அம்மனுக்கு அபிஷேகம் செய்தும், அம்மனுக்கு முளைப்பாரி, கரகம் போன்றவைகளை நேர்த்திக்கடனாக செலுத்தியும் அம்மனை வழிபட்டனர்.

கோவில் திருவிழாவில், ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இதனால் உற்சாக அலை கரை புரண்டு ஓடியது. இந்தத் திருவிழாவானது போலீசாரின் பாதுகாப்புடன் நடைபெற்றது. மேலும், விழா கமிட்டி சார்பாக பொது மக்களை மகிழ்விப்பதற்காக வேட நிகழ்ச்சி நடைபெற்றது. 50க்கும் மேற்பட்ட வாகனங்களில் நடைபெற்ற வேட நிகழ்ச்சியில் கடவுள் வேடமிட்ட நபர்கள் ஊர்வலமாக முக்கிய வீதிகளில் சுற்றி வந்தனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *