களமிறக்கப்பட்ட “ஹப்சோரா!” காசாவை சுற்றும் கழுகு கண்கள்.. இஸ்ரேல் எடுத்த பகீர் முடிவு.. அடுத்து என்ன

டெல் அவிவ்: இஸ்ரேல் ஹமாஸ் இடையேயான போரில் ஏஐ மாடல்கள் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இது போரை முழுமையாக வேறு ஒரு தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளதாக விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

இஸ்ரேல் ஹமாஸ் இடையே கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் போர் நடந்து வருகிறது. இப்போது காசாவுக்குள் புகுந்து ஹமாஸ் இலக்குகளைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல்களை ஆரம்பித்துள்ளது.

இதற்கிடையே இந்த போரில் காசா மீது தாக்குதல் நடத்த ஹமாஸ் ஏஐ மாடல்களை பயன்படுத்தியதாகக் கடந்த வாரம் தகவல் வெளியானது. இது முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஏஐ மாடல்: அதாவது காசா பகுதியில் எங்கெல்லாம் ஹமாஸ் பயங்கரவாதிகள் இருக்கிறார்கள் என்பதைக் கண்டறிந்து அங்கெல்லாம் ஏவுகணை தாக்குதலை நடத்த இஸ்ரேல் இந்த ஏஐ மாடலை பயன்படுத்துவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதற்காக இஸ்ரேல “ஹப்சோரா” என்ற ஏஐ மாடலை பயன்படுத்துவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. போரில் ஏஐ மாடல்களை பயன்படுத்துவது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது.

இரு தரப்பிற்கும் இடையேயான போர்களில் ஏஐ மாடல்களை பயன்படுத்தத் தொடங்கினால் அது பேரழிவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் மிக மிக அதிகம். ஏனென்றால் ஏஐ பன்முகத்தன்மை கொண்டதாக இருக்கிறது.. உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, இலக்குகளைத் துல்லியமாகக் குறிவைப்பது ஆகியவற்றில் ஏஐ சிறந்து விளங்குகிறது. மேலும், தானாகவே ஏவுகணைகளை அனுப்பவும் கூட ஏஐ மாடல்களுக்கு திறன் இருக்கிறது. எதற்கு உதவும்: இந்த ஏஐ பயன்பாடு என்பது துல்லிய தாக்குதல்களை நடத்த உதவுவதாகவும் பொதுமக்களின் உயிரிழப்புகளைக் குறைக்க உதவுவதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இருப்பினும், இது அவ்வளவு எளிமையானது இல்லை.

ஏஐ மாடல்கள் என்பது விரிவான டேட்டா மற்றும் அல்காரிதம்களை நம்பியே அதன் அடிப்படையில் முடிவுகளை எடுக்கிறது. இதனால் பக்கச்சார்பு மற்றும் தவறான முடிவுகள் எடுக்கப்படும் அபாயம் இருக்கிறது. வரும் காலத்தில் ஏஐ மாடல்கள் பயன்பாடு போர்கள் அதிகரித்துக் கொண்டே இருந்தால் அது மனிதநேயமற்ற தன்மைக்கு வழிவகுக்கும்.. மேலும், போருக்கான உண்மையான காரணம் குறித்து ஆராயப்படாமலேயே போகும் அபாயம் இருக்கிறது. இதனால் போரில் வெற்றி என்பதே பிரதானமான ஒன்றாக மாறிவிடும், உண்மையான பிரச்சினைகளை அமைதியான முறையில் தீர்க்க வாய்ப்பு அமையாமல் போகும்.

ஆபத்துகள் என்ன: ஏஐ அமைப்புகள் டேட்டா அடிப்படையில் முடிவுகளை எடுக்கும் என்பதால் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றாமல் போகும் அபாயம் இருக்கிறது. மேலும், மனிதநேயமற்ற முடிவுகளையும் எடுக்கும் அபாயம் இருக்கிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கலாம். மேலும், ஏஐ மாடல்கள் உள்ளே வந்தால் நாடு, அரசு உள்ளிட்ட கட்டமைப்புகளின் மீதே மக்கள் நம்பிக்கை இழக்கக்கூடும்.

மேலும், போர் விவகாரங்களில் ஏஐ முடிவுகளை எடுக்க ஆரம்பித்தால் அதில் வெளிப்படைத்தன்மை இல்லாமல் போகும். எதாவது தவறு நடந்தால் யார் பொறுப்பேற்பார்கள் என்பதே தெரியாமல் போகும். இது போரை மேலும் மேலும் கொடூரமானதாக மாற்றும். ஏஐ பயன்பாட்டில் பல நன்மைகள் இருந்தாலும், இதுபோன்ற சில பிரச்சினைகளும் இருக்கவே செய்கிறது. எதிர்காலம் என்ன: ஏஐ என்பது முழுமையாக வளர்ந்த ஒரு தொழில்நுட்பம் இல்லை.

இப்போது தான் அது மெல்ல வளர்ந்து வருகிறது. எனவே, இப்போதே அதை நாம் போர்களைப் பயன்படுத்துவதை நிச்சயம் தவிர்க்க வேண்டும். ஏஐ தொழில்நுட்பம் மேம்பட்ட ஒன்றாக ஆகும் வரை தொழில்நுட்ப ரீதியாக வளர்ச்சியடையும் வரை இந்த ஏஐ மாடல்களை கவனமாக கண்காணிக்க வேண்டும். இல்லெயன்றால் விபரீதம் ஏற்படும் அபாயம் இருக்கவே செய்கிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *