கத்தரிக்காய் வற்றல் குழம்பு

தேவையானவை:

கத்தரி வற்றல் – 15,
பூண்டு – 20 பல்,
புளி – எலுமிச்சையளவு,
சாம்பார் பொடி (அ) வற்றல் குழம்பு பொடி – 4 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.

தாளிக்க:

நல்லெண்ணெய் – 4 ஸ்பூன்,
கடுகு – 1 ஸ்பூன்,
வெந்தயம் – 1 ஸ்பூன்,
பெருங்காயம் – ½ ஸ்பூன்,
மிளகாய் – 2,
கறிவேப்பிலை – 1 ஆர்க்,
தக்காளி – 4 பீஸ்.

செய்முறை:

முதலில் கத்தரி வற்றலை 10 நிமிடம் வெந்நீரில் ஊறவிட வேண்டும். பின் நல்லெண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்தவைகளை தாளித்து அதில் பூண்டையும் சேர்த்து வதக்கி, கத்தரி வற்றலையும் சேர்த்து தக்காளி சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து விட்டு பொடி, உப்பு, சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதித்து நெடி வாசனை போனதும் குழம்பு கெட்டியானதும் இறக்கி விடவும். காரம் அதிகமென்றால் 1 ஸ்பூன் நாட்டு சர்க்கரை சேர்க்கலாம். இதை நல்லெண்ணெய் ஊற்றி சாதத்தில் பிசைந்து சாப்பிட்டால் சூப்பராக இருக்கும். சுட்ட அப்பளம், தயிர் பச்சடி நல்ல காம்பினேஷன்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *