கத்தரிக்காய் பஜ்ஜி

தேவையானவை:

பெரிய கத்தரிக்காய் – 1,
கடலை மாவு – ¾ கப்,
அரிசிமாவு – ¼ கப்,
காரப்பொடி – 2 ஸ்பூன்,
உப்பு – திட்டமாக,
சமையல் சோடா – ஒரு சிட்டிகை,
பெருங்காயம் – 1 ஸ்பூன்,
பொரிக்க – எண்ணெய்.

செய்முறை:

முதலில் மாவுகளை போட்டு மிளகாய் தூள், உப்பு, பெருங்காயம், சோடா உப்பு சேர்த்து கலந்து தண்ணீர் ஊற்றி இட்லி மாவு போல் கெட்டியாக கரைத்துக் கொள்ளவும். பிறகு அடுப்பில் கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பு பத்த விடவும். எண்ணெய் காய்ந்ததும் கத்தரிக்காயை மெல்லிய வில்லைகளாக வட்ட வட்டமாக நறுக்கி பஜ்ஜி மாவில் தோய்த்து எண்ணெயில் போடவும். ஜல்லிக் கரண்டியால் புரட்டி விட்டு ஓசை அடங்கியதும் எடுக்கவும். இது உருளை, வாழை பஜ்ஜியைவிட மிகவும் ருசியாக இருக்கும்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *