கடைசி பந்தில் ஸ்காட்லாந்து வெற்றி

ஜிம்பாப்வேயில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை தகுதிச் சுற்று போட்டியில் இன்று நடந்த ஆட்டத்தில் அயர்லாந்தை ஸ்காட்லாந்து அணி வென்றுள்ளது. டாஸ் வென்ற ஸ்காட்லாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து அயர்லாந்து வீரர்கள் களத்தில் இறங்கினர். தொடக்க வீரர் ஆண்டி மெக்பிரைன் 32 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் வெளியேற 6 ஆவது விக்கெட்டிற்கு இணைந்த கர்டிஸ் கேம்பர் மற்றும் டாக்ரேலி இணை அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

கேம்பர் அதிரடியாக விளையாட டாக்ரேலி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை சேர்த்தார். இருவரும் 6 ஆவது விக்கெட்டிற்கு 136 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். டாக்ரேலி 69 ரன்னிலும், கர்டிஸ் கேம்பர் 120 ரன்னிலும் வெளியேற 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த அயர்லாந்து  அணி 286 ரன்கள் சேர்த்தது.

287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய ஸ்காட்லாந்து அணியில் தொடக்க வீரர் கிறிஸ்டோபர் மெக்ப்ரைட் 56 ரன்கள் எடுத்தார். அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்னில் வெளியேற, 152 ரன்களில் ஸ்காட்லாந்து அணி 7 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அந்த அணி நிச்சயம் தோல்வியடையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைக்கேல் லீஸ்க் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதையின் பக்கம் திருப்பினார் 61 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 சிக்சர் மற்றும் 9 பவுண்டரியுடன் 91 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் நின்றார்.

அவருக்கு உறுதுணையாக கிறிஸ் கிரீவ்ஸ் 20 ரன்களும், மார்க் வாட் 47 ரன்களும் எடுத்தனர். கடைசி பந்தில் ஸ்காட்லாந்து அணி வெற்றி இலக்கை எட்டி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *