கடைசி நேரத்தில் தடங்கல்.. உத்தராகண்டிலிருந்து ஷாக் தகவல்! 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் தொய்வு

உத்தரகாண்ட் மாநிலத்தின் இமயமலை சூழ்ந்த பகுதி சில்க்யாரா. இங்கு அமைந்து உள்ள இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்து உள்ளனர். இந்த நிலையில் கடந்த 12 ஆம் தேதி திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. அப்போது சுரங்கம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதன் காரணமாக சுரங்கப் பாதை தடைப்பட்டது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சுக்கித் தவித்து வருன்றனர். சுமார் 2 வாரங்களாக தொழிலாளர்கள் சுரங்கத்திற்கு உள்ளே உயிருக்கு போராடி வருகிறார்கள்.

தொழிலாளர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், மாநில பேரிடர் மீட்பு படையினர், தீயணைப்பு படையினர் என ஏராளமான வீரர்கள் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். மொத்த அரசு நிர்வாகமும் அங்கு குவிந்து இருக்கிறது. பல ஊடகங்கள் சில்கியாராவில் இருந்து நேரடி கள நிலவரங்களை வெளியிட்டு வருகின்றன. உத்தராகண்ட் சுரங்கத்தின் மீதே நாட்டின் ஒட்டு மொத்த பார்வையும் உள்ளது.

மீட்புப் பணிகளை துரிதப்படுத்த உத்தராகண்ட் முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டு உள்ளார். உத்தராகண்ட் முதலமைச்சர் தாமியிடம் பிரதமர் நரேந்திர மோடி நேற்று தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு மீட்பு விபரங்களை கேட்டறிந்தார். தொழிலாளர்களை பத்திரமாக மீட்பதில் முன்னுரிமை தர வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தி உள்ளார்.

சுரங்கத்திற்குள் சிக்கிய 41 தொழிலாளர்களுக்கு உணவுப் பொருள்கள் வழங்கவும் அவா்களைத் தொடா்பு கொள்ளவும் 4 அங்குல அளவிலான குழாய் பயன்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திங்கட்கிழமை 53 மீட்டா் தொலைவு கொண்ட இடிபாடுகளுக்கு மத்தியில் 6 அங்குல குழாய் செலுத்தப்பட்டது. இதன் வாயிலாக மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலாளா்களுடன் தகவல் பரிமாற்றத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். உணவு, குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது.

இந்தக் குழாய்யில் எண்டோஸ்கோபி கேமரா அனுப்பப்பட்டு, சுரங்கத்தில் சிக்கி உள்ள தொழிலாளர்கள் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியிடப்பட்டன. அதன் மூலம் தொழிலாளர்களுக்கு தேவையான அறிவுரைகளை அதிகாரிகள் அளித்து வருகின்றனர். கடந்த 22 ஆம் தேதி வேறு வழிகளில் தொழிலாளர்களை மீட்க முடிவு செய்த மீட்புப் பணியினர் செங்குத்தான வடிவில் துளையிட முடிவு செய்தனர். இதற்கு ஏற்ற இடத்தை ஆய்வு செய்து துளையிடும் புள்ளியை கண்டுபிடித்து துளையிட தொடங்கினர்.

உறைய வைக்கும் கடுமையான குளிரின் காரணமாக இந்த பணிகளில் கடும் தொய்வு ஏற்பட்டது. அதையும் மீறி துளையிடும் பணி ஆகர் இயந்திரத்தின் மூலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் சுரங்கத்தில் உள்ள கான்கிரிட் கம்பிகளின் காரணமாக துளையிடும் பணி கடுமையாக பாதிக்கப்பட்டது. அந்த தடையும் சரி செய்யப்பட்டு நேற்று மதியம் மீண்டும் துளையிடும் பணி தொடங்கியது. அப்போதும் இரும்பு கம்பிகள், வலை கம்பிகள் இயந்திரத்தின் பிளேடுகளில் சிக்கியது. இதனால் மேற்கொண்டு இருக்கும் தடைகளை மனிதர்களை அனுப்பிய சிறிய இயந்திரங்களை கொண்டு அகற்ற முடிவு செய்துள்ளனர் மீட்புக் குழுவினர். இதனால் மீட்புப் பணிகள் மேலும் தாமதமாகும் என்று கூறப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *