ஒடிசா ரயில் விபத்து – தமிழ்நாடு, புதுச்சேரி அரசு உதவி எண்கள் அறிவிப்பு – News18 தமிழ்

கொல்கத்தாவில் இருந்து சென்னை யை நோக்கி வந்து கொண்டிருந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 7 மணியளவில் ஒடிசா மாநிலம் பாலசோர் ரயில் நிலையத்தை கடந்து கொண்டிருந்தது. இதனிடையே, பாஹநகர் பஜார் நிலையம் அருகே பெங்களூருவிலிருந்து ஹவுரா சென்ற சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டுள்ளது. விபத்துக்குள்ளான இந்த ரயிலின் பெட்டிகள் அருகே இருந்த தண்டவாளத்தில் கவிழ்ந்தன.

அருகில் இருந்த தண்டவாளத்தில் சென்னை நோக்கி வந்த கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில், தடம்புரண்ட கிடந்த பெங்களூரு- ஹவுரா ரயிலின் பெட்டிகள் மீது மோதியது. இதை அறியாமல் சிறிது நேரத்தில் அதே தண்டவாளத்தில் வந்த சரக்கு ரயில், ஏற்கெனவே விபத்துக்குள்ளான கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதி, அதன் பெட்டிகளும் தடம் புரண்டன. இந்த கோர விபத்தில் 233 பேர் பலியாகினர். படுகாயமடைந்த 900-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். மேலும் இந்த விபத்தில் காயமானவர்களை மீட்பதற்கு மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.

இந்நிலையில், இந்த விபத்துக்குள்ளானவர்களை பற்றிய தகவல்களை அறிய, 044 28593990, 9445869843 என்ற அவசர உதவி எண்களை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம் என தமிழ்நாடு மீட்புக்குழு அறிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்து குறித்து புதுச்சேரி அரசு சார்பில் 1070, 1077, 0413-2251003, 2255996 என்ற உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தை அடுத்து, இந்த வழிதடத்தில் செல்லும் பல ரயில்களை ரயில்வே நிர்வாகம் ரத்து செய்துள்ளது. மேலும் பல ரயில்கள் வேறு வழிதடத்தில் செல்லும் என அறிவித்துள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *