ஏவிஎம் மியூசியத்தில் கமல் பைக்

சென்னை: சகலகலா வல்லவன் படத்தில் ராயல் என்ஃபீல்ட் புல்லட் இடம்பெற்ற ’இளமை இதோ இதோ’ எனும் பாடல் தமிழ் சினிமாவில் புத்தாண்டை கருப்பொருளாக கொண்டு உருவாக்கப்பட்ட மிகச்சிறந்த பாடல்களில் ஒன்றாக திகழ்வதுடன், ஒவ்வொரு புத்தாண்டிலும் வானொலி மற்று தொலைக்காட்சி சேனல்களில் தவறாமல் ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

புல்லட் வாகனத்தை மக்கள் அதிக அளவில் பயன்படுத்தும் நடைமுறையை கொண்டு வந்த படமாகவும் இது அமைந்தது. கமல்ஹாசனின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று (நவ-7) ஏவிஎம் மியூசியத்தில் அவர் ‘சகலகலா வல்லவன்’ படத்தில் பயன்படுத்திய ராயல் என்ஃபீல்ட் புல்லட் காட்சிக்கு வைக்கப்பட்டது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Translate »