ஏற்காடு: `இடியும் நிலையில் பள்ளிக்கூடங்கள்’ – நிலையை விவரித்த ஜூவி… புது கட்டடங்கள் திறப்பு!

சேலம் மாவட்டம், ஏற்காடு மலைப் பகுதியில் 60-க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் அமைந்திருக்கின்றன. இங்குள்ள மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்குக் கல்வி, மருத்துவம் போன்றவை முறையாகக் கிடைக்கிறாதா என்று பார்த்தால் இல்லை… அப்படி ஏற்காடு பகுதியில் அமைந்திருக்கும் இரண்டு பள்ளிகள், பல ஆண்டுகளாக பழுதடைந்த நிலையில் இருந்து வந்தன. அவற்றில்தான் குழந்தைகளும் படித்து வந்தனர். இது குறித்த தகவல் கிடைக்க, சம்பந்தப்பட்ட பள்ளிக்கட்டடங்கள் எங்கு இருக்கின்றன என்பதைத் தேடிச் சென்றோம்.

பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில்  மகேஸ்
பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ்

செங்காடு கிராமத்தில் 8-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கூடமும், புளியங்கடை கிராமத்தில் இயங்கி வரும் 5-ம் வகுப்பு வரையிலான பள்ளிக்கட்டடமும் மிக மோசமான நிலையில் இருந்து வந்தன.

இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வந்தனர். அவர்களுக்கு சரியான பள்ளிக்கட்டட வசதி இல்லாமல், மழையிலும், வெயிலிலும் அமர்ந்து கல்வி பயின்று வருவதைக் கண்டோம்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *