எ.வ. வேலுவை விடாது விரட்டும் வருமான வரித்துறை.. இன்றும் ஐடி ரெய்டு

திருவண்ணாமலை: அமைச்சர் எ.வ.வேலுவிற்கு சொந்தமான அருணை கல்லூரி வளாகத்தில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு 6 நாட்கள் வருமான வரி சோதனை நடைபெற்று சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் இன்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ. வேலு: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர்.

அமைச்சர் எ.வ. வேலு: தமிழக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருப்பவர் எ.வ. வேலு. இவருக்கு சொந்தமாக பல்வேறு மருத்துவக் கல்லூரிகளும், நிறுவனங்களும் தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கி வருகின்றன. திருவண்ணாமலையில் கல்வி நிறுவனங்களை மிகப்பெரிய வளாகத்தில் நடத்தி வருகிறார்,

ஐடி ரெய்டு: எ.வ வேலுவிற்கு சொந்தமான நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதாக வருமான வரித்துறைக்கு அண்மையில் புகார்கள் சென்றன. இதன்பேரில், கடந்த 2ஆம் தேதி முதல் எ.வ. வேலுவுக்கு சொந்தமான கல்லூரிகள், ஹோட்டல்கள், வணிக நிறுவனங்கள் என 80க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சோதனை மேற்கொண்டனர்.

உறவினர்கள் வீடுகளில் ரெய்டு:

அமைச்சர் வேலு மற்றும் அவருடைய மகன் கம்பன், குமரன் ஆகியோர் தொடர்புடைய இடங்களிலும் திருவண்ணாமலை அருணை பொறியியல் கல்லூரியிலும் சோதனை நடைபெற்றது. கோவையில் அமைச்சர் எ.வ.வேலுவின் உறவினரான மீனா ஜெயக்குமார் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதுவரை ரூ.18 கோடி அளவுக்கு கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

எ.வ. வேலு பேட்டி:

வருமான வரித்துறை சோதனை பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எ.வ. வேலு, இது போன்ற சோதனைகளுக்கு எல்லாம் நானோ, எனது தலைவரோ, திமுக தொண்டர்களோ அஞ்சப்போவதில்லை என்று கூறினார். ஒரு பைசா கூட என்னிடமிருந்து வருமான வரித்துறை எடுத்து செல்லவில்லை என்றும் தெரிவித்தார். இதன் மூலம் தேர்தலில் எங்களின் பணிகளை முடக்கி விட முடியாது என்று கூறிய எ.வ. வேலு, லோக்சபா தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கூறினார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *