எழுந்து நிற்க கூட முடியல.. வெளியே தெரிஞ்சா மொத்தமா போயிடும்.. சீக்ரெட்டாக சிகிச்சை எடுக்கும் நடிகை! | Top actress takes secret treatment for her rare disease

பெரிய நம்பிக்கை

பெரிய நம்பிக்கை

குடும்பத்தில் விதிக்கப்பட்ட கண்டிஷன்கள் எல்லாம் பிடிக்காமல் சிறகை விரித்து பறக்க ஆசைப்பட்ட அந்த பிரபல நடிகை காதல் கணவரே வேண்டாம் என்று தூக்கி எறிந்து பெரிய நம்பிக்கையுடன் தனியாக வாழ அடியெடுத்து வைத்தார். ஆனால், கொஞ்ச நாட்களிலேயே அவரது நம்பிக்கை சுக்கு நூறாக உடைந்து விழும் அளவுக்கு அவருக்கே அப்படியொரு பெரிய பிரச்சனை ஏற்பட்டு விட்டது.

எழுந்து நிற்க கூட முடியல

எழுந்து நிற்க கூட முடியல

குத்தாட்டம், குடியாட்டம் என போட்டு வந்த அந்த நடிகை உடல் எடையை குறைக்கிறேன் என்கிற பெயரில் கடுமையாக ஒர்க்கவுட் செய்வது, பிளாஸ்டிக் சர்ஜரி உள்ளிட்ட ஏகப்பட்ட விஷயங்களில் ஈடுபட்டு வந்த நிலையில், அதற்கெல்லாம் அவரது பாடி தாங்காமல் இப்போது எழுந்து நிற்க கூட முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு விட்டார் என தகவல்கள் கசிந்துள்ளன.

சீக்ரெட்டாக சிகிச்சை

சீக்ரெட்டாக சிகிச்சை

தனது நிலைமையை வெளியே தெரிந்து விட்டால் கொஞ்ச நஞ்ச மார்க்கெட் கூட முழுதாக பறிபோய் விடும் என்பதால் தான் நன்றாகவே இருப்பதாகவும் அட்மிட் ஆன விஷயம் எல்லாம் சும்மா வதந்தி என்றும் மறுத்து வருகிறார். ஆனால், உண்மையில் தனது கொடிய நோய்க்காக சீக்ரெட்டாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் முன்பை விட நிலைமை ரொம்பவே கவலைக்கிடமாக மாறி விட்டதாகவும் நெருங்கிய வட்டாரங்கள் காத்துவாக்குல ரகசியங்களை கட்டவிழ்த்து வருகின்றன.

பணம் போட்டவர்களுக்கு சிக்கல்

பணம் போட்டவர்களுக்கு சிக்கல்

இந்த நடிகையை நம்பி அட்வான்ஸ் கொடுத்த சில தயாரிப்பாளர்கள் தற்போது நடிகையின் நிலைமையை பார்த்து பணத்தை திருப்பிக் கூட கேட்க முடியாத சூழலில் உள்ளதாக கூறுகின்றனர். புதிதாக அந்த நடிகையை வைத்து எந்த படமும் கமிட் செய்ய வேண்டாம் என்றும் வேறு நடிகைகளை பாருங்கள் என டாப் ஹீரோக்களே சிக்னல் கொடுத்ததால் இயக்குநர்களும் மற்ற நடிகைகளும் ஏற்றார் போல கதாபாத்திரங்களை மாற்றி வருவதாக கூறுகின்றனர்.

கண்டுக்காத கணவர்

கண்டுக்காத கணவர்

மனைவியின் நிலை அறிந்து இந்த சூழலில் ஆவது அவருக்கு உதவலாம் என கருணையோடு பேசிய கணவரையும் பிரிவு காரணமாக உதாசினப்படுத்தி உள்ளாராம் அந்த நடிகை. அதன் காரணமாக, இனிமேல் அவரை கெஞ்சி எந்த பிரயோஜனமும் இல்லை என்றும் தனது தனி ரூட்டை இனி பார்த்துக் கொள்ளலாம் என நடிகரும் இவரை சுத்தமாக தற்போது கண்டு கொள்வதே இல்லையாம்.

மூன்றெழுத்து நடிகை முன்னேற்றம்

மூன்றெழுத்து நடிகை முன்னேற்றம்

பிரபல நடிகையின் பின்னடைவு மூன்றெழுத்து நடிகைக்கு முன்னேற்றமாக மாறியுள்ளது. மாஸ் நடிகரின் அந்த பெரிய படம் மட்டும் இல்லாமல் இந்த நடிகையை கமிட் செய்த சில பக்கத்து ஸ்டேட் பட வாய்ப்புகளும் தானாக மூன்றெழுத்து நடிகையை தேடி வந்ததாக கூறுகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *