உஷார்.! மிரட்டும் கொரோனா.. இந்த 7 நாடுகளுக்கு மட்டும் போகாதீங்க!

சீனாவில் பரவி வரும் பி.எஃப்.7 வைரஸ் உலக நாடுகளை மீண்டும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இந்தியாவில் அலை வராமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டுள்ளன. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகளிடம் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இதுவரை 6 வெளிநாட்டவர்களுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த சூழலில் நீங்கள் வெளிநாடு செல்லும் முடிவில் இருந்தால் இந்த 7 நாடுகளுக்கு மட்டும் செல்வத்தை தவிருங்கள். வெளிநாடு செல்ல வேண்டாம் என்கிற பட்டியலில் நமது அந்த நாடான சீனாதான் முக்கிய இடத்தில் உள்ளது. அங்கு 2 நாட்களில் 25 கோடி பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியானது. இதுபோலவே, ஜப்பான் 8 வது முறையாக அலையால் பாதிக்கப்பட்டுள்ளது. அங்கு தினந்தோறும் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் ஜப்பான் செல்வதாக இருந்தால் அதனையும் தவிர்த்து விடுங்கள்.

அமெரிக்காவிலும் கடந்த சில நாட்களாக பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 28 நாட்களில் கிட்டத்தட்ட 15 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதேபோல தெற்கு கொரியாவில் 68,000 பேருக்கு நாள்தோறும் தொற்று உறுதியாகியுள்ளது. மேலும்,

பிரேசில், ஜெர்மனி ஆகிய நாடுகளில் தொற்று உயர்ந்த வண்ணம் உள்ளது. பிரான்சில் கடந்த 28 நாட்களில் 10 லட்சம் பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆகவே, இந்த புத்தாண்டுக்கு நீங்கள் செல்லும் நாடுகள் பட்டியலில் இவை இடம்பெற்றிருந்தால் உங்கள் பயணத்தை சற்று தள்ளிவைத்து விடுங்கள்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *