உலக கோப்பை புள்ளி பட்டியல் – இந்தியா முதலிடம்.. அரையிறுதியில் ஒரு கால் பதிச்சாச்சு

2023 ஆம் ஆண்டு ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் தோல்வியே சந்திக்காத அணி என்ற பெருமையை தற்போது இந்தியா படைத்திருக்கிறது .21வது லீக் ஆட்டத்தில் இந்தியாவும் நியூசிலாந்து அணியும் பல பரிட்சை நடத்தியது. இதில் இரண்டு அணிகளுமே விளையாடிய நான்கு ஆட்டங்களிலும் வெற்றி பெற்று இருந்தது.

மேலும் நியூசிலாந்து அணி உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக மெர்சலான ரெக்கார்டை வைத்திருந்தது. இதனால் நியூசிலாந்தை இந்தியா வீழ்த்துமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. இந்த நிலையில் நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் 273 ரன்கள் எடுக்க இந்திய அணி இந்த இலக்கை 48 ஓவரில் ஆறு விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றி பெற்றது.

இதன் மூலம் தற்போது புள்ளி பட்டியலில் இந்திய அணி முதல் இடம் பிடித்திருக்கிறது. விளையாடிய ஐந்து போட்டிகளிலும் ஐந்தில் வெற்றி பெற்று 10 புள்ளிகள் உடன் இந்தியா முதலிடத்தில் இருக்கிறது.ரன் ரேட் 1.35 என்ற அளவில் இருக்கிறது. தற்போது நியூசிலாந்து அணி 5 போட்டிகளில் விளையாடி நான்கில் வெற்றி ஒன்று தோல்வி எட்டு புள்ளிகள் உடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. நியூசிலாந்துடைய ரன் ரெட் 1.48 என்ற அளவில் இருக்கிறது. தென்னாப்பிரிக்கா அணி நான்கு போட்டிகளில் விளையாடி மூன்றில் வெற்றி ஆறு புள்ளிகளுடன் இரண்டு புள்ளி இரண்டு ஒன்று இருக்கிறது. ஆஸ்திரேலிய அணி நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகளுடன் மைனஸ் 0.19 என்ற ரன் ரேட்டில் நான்காவது இடத்தில் இருக்கிறது.பாகிஸ்தான அணி ஐந்தாவது இடத்தில் இருக்கிறது. நான்கு போட்டிகளில் விளையாடி இரண்டு வெற்றி இரண்டு தோல்வி என நான்கு புள்ளிகள் உடன் மைனஸ் 0.45 என்ற அளவில் இருக்கிறது

வங்கதேச அணி ஆறாவது இடத்திலும் நெதர்லாந்து அணி ஏழாவது இடத்திலும் இலங்கை அணி எட்டாவது இடத்திலும் இங்கிலாந்து அணி ஒன்பதாவது இடத்திலும்,ஆப்கானிஸ்தான் அணி பத்தாவது இடத்திலும் இருக்கிறது. ஆறாவது இருந்து பத்தாவது இடம் பிடித்த அனைத்து அணிகளும் இரண்டு புள்ளிகள் மட்டுமே பெற்று இருக்கிறது. அவர்களை ரன் ரைட் மட்டுமே வித்தியாசப்படுத்தி இருக்கிறது. இந்திய அணி இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் அரையிறுதி வாய்ப்பு உறுதியாகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *