உலக கோப்பையில் முதல் சதம்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மும்பையில் நேற்று இப்ராகிம் ஸத்ரன் விளாசிய சதம், உலக கோப்பை வரலாற்றில் ஒரு ஆப்கானிஸ்தான் வீரர் அடித்த முதல் சதமாக அமைந்தது. இளம் தொடக்க வீரரான இப்ராகிம் (21 வயது, 330 நாள்) ஒருநாள் போட்டிகளில் அடித்த 5வது சதம் இது. உலக கோப்பையில் சதம் விளாசிய இளம் வீரர்கள் பட்டியலில் அவர் 4வது இடத்தை பிடித்துள்ளார். அயர்லாந்தின் பால் ஸ்டர்லிங் (20 வயது, 196 நாள்), ஆஸ்திரேலியாவின் ரிக்கி பான்டிங் (21 வயது, 76 நாள்), இலங்கையின் பெர்னாண்டோ (21 வயது, 87 நாள்) முதல் 3 இடங்களில் உள்ளனர்.

* இலங்கைக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பேட் செய்தபோது, வங்கதேச கேப்டன் ஷாகிப் அல் ஹசன் இடது கை சுட்டுவிரலில் காயம் அடைந்தார். ஸ்கேன் பரிசோதனையில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது தெரியவந்ததை அடுத்து, வங்கதேச அணியின் கடைசி லீக் ஆட்டத்தில் அவர் களமிறங்க மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. நவ.11ல் புனேவில் நடக்க உள்ள இந்த போட்டியில் ஆஸ்திரேலியா வங்கதேசம் மோத உள்ளன.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *