உயரமான நடிகையின் கட்டுப்பாட்டில் இருந்த வாரிசு நடிகர்..சீக்ரெட்டா பிரச்சனையை தீர்த்த அப்பா! | Cinema Gossip : A famous actor who was controlled by a tall actress

இரண்டு மொழி படங்களிலும்

இரண்டு மொழி படங்களிலும்

தெலுங்கை பூர்வீகமாக கொண்ட அந்த உயரமான நடிகைக்கு தமிழில் பெரிய வரவேற்பு இல்லை என்பதால், ஆற்றில் ஒரு கால் சேற்றில் ஒரு கால் என்பது போல கோலிவுட் மற்றும் டோலிவுட் என இரண்டு மொழிப் படங்களிலும் நடித்தார். இதையடுத்து, பல தோல்வி படங்களுக்கு பிறகு உயரமான நடிகை பெயர் சொல்லும் அளவுக்கு படவாய்ப்புகள் வந்தன.

வாரிசு நடிகருடன் ஜோடி

வாரிசு நடிகருடன் ஜோடி

விடாது முயற்சி விஸ்வரூப வெற்றி என்பது போல பல தோல்வி படங்களுக்கு பிறகு உயரமான நடிகை நல்ல கதாபாத்திரத்தை தேர்ந்தெடுத்து நடித்த சில படங்கள் வெற்றி பெற்றதால், முன்னணி நடிகை என பெயர் எடுத்து வைத்தார். இந்த நேரத்தில் வாரிசு நடிகருடன் ஜோடி போடும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் இருவரின் கெமிஸ்டிரியும் சும்மா பக்காவாக அமைந்து படம் வசூலையும் வாரிக்குவித்தது.

நடிகை மீது க்ரஷ்

நடிகை மீது க்ரஷ்

இதையடுத்து,வாரிசு நடிகருக்கு உயரமான நடிகை மீது ஒரு க்ரஷ் ஏற்பட்டதை அடுத்து, தனது அடுத்த படத்திலும், அந்த நடிகையே இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரிடம் அன்பு வேண்டுகோள் விடுத்துள்ளார். இதையடுத்து, அந்த படத்திலும் இருவரும் ஜோடியாக நடிக்கும் படம் பட்டையை கிளப்பி வசூலை வாரிக்குவித்தது.

சீக்ரெட் பேச்சுவார்த்தை

சீக்ரெட் பேச்சுவார்த்தை

அதன் பின் வாரிசு நடிகர் பற்றியும் உயரமான நடிகை பற்றியும் கோலிவுட்டில் கிசுகிசுக்கப்பட்டன. இந்த வதந்தி வாரிசு நடிகரின் அப்பாவுக்கு தெரியவர, வாரிசு நடிகரை சீக்ரெட்டாக அழைத்து குடும்ப பாரம்பரியத்தை சுட்டிக்காட்டி பிரச்சனையை பேசி உயரமான நடிகையின் நட்பை துண்டித்துள்ளார். அதன் பின் சில மாதங்களிலேயே அந்த நடிகருக்கு திருமணத்தையும் செய்து வைத்துள்ளார்.

இன்னும் திருமணமாகவில்லை

இன்னும் திருமணமாகவில்லை

இப்போது அந்த நடிகர் குழந்தை குட்டி என குடும்பத்தை பொறுப்பாக கவனித்து வருகிறார். அதுமட்டும் இல்லாமல், அந்த வாரிசு நடிகர் டாப் நடிகர்களின் பட்டியலில் இடம்பிடித்து அடுத்தடுத்து ஹிட் படங்களிலும் நடித்து வருகிறார். ஆனால், அந்த உயரமான நடிகை திருமணம் செய்து கொண்டால் மார்க்கெட் போய்விடும் என இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *