உத்தராகண்ட் விபத்தில் சிக்கிய 41 தொழிலாளர்களின் உயிர் காத்த தரணி ஜியோடெக்

Uttarakhand Tunnel Collapse Vs Dharani Geotech Engineers: உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் உள்ளே சிக்கிக்கொண்ட 41 தொழிலாளர்களின் உயிரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியில் தமிழ்நாட்டில் திருங்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனம் முக்கியப் பங்காற்றியுள்ளது.

தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனம்

பல வெளிநாட்டு சேர்ந்த நிறுவனங்கள், இயந்திரங்கள் மற்றும் குழுக்கள் முயற்சி செய்தும் சாதிக்க முடியாமல் இருந்த நிலையில் திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப மேன்மை, அதிநவீன இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களின் உதவியோடு துளையிட்டு 41 தொழிலாளர்களின் உயிர்களைக் காப்பாற்றியுள்ளனர்.

உத்தரகாசி சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கப்பாதை

‘ஆல் வெதர்’ சாலை திட்டத்தின் கீழ் தேசிய நெடுஞ்சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழகத்தின் மேற்பார்வையில் நவயுகா இன்ஜினியர்ஸ் நிறுவனம் உத்தரகாசி சில்க்யாரா – தண்டல்கான் ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் சுரங்கப்பாதையைக் கட்டி வருகிறது.

சுரங்கத்தில் சிக்கி கொண்ட 41 தொழிலாளர்கள்

நவம்பர் 12ஆம் தேதி அதிகாலை 5 மணியளவில் உத்தராகண்ட் மாநிலம் உத்தரகாசி சில்க்யாரா – தண்டல்கான் சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தால் 41 சுரங்கத் தொழிலாளர்கள் உள்ளேயே சிக்கி கொண்டதால், அவர்களை உடனடியாக மீட்க வேண்டும் என மீட்புக்குழு வேகமான மீட்புப் பணிகளை மேற்கொண்டது. வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்களின் இயந்திரங்கள் மற்றும் மீட்புக்குழு உத்தரகாசி பகுதிக்கு வரவழைக்கப்பட்டது.

மீட்பு பணியில் தோல்வியுற்ற இயந்திரம்

முதலில் மீட்பு பணியில் ஈடுபட்ட அமெரிக்க இயந்திரம் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டாலும், ஒரு கட்டத்திற்கு மேல் அந்த இயந்திரத்தால் முன்னேற்ற முடியாமல் மீட்பு பணி தடைப்பட்டது. அதாவது மூன்று நாட்கள் முயற்சி செய்தும் அமெரிக்க நிறுவனத்தால் முடியவில்லை.

தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் வெற்றி

அதற்குப்பிறகு, திருச்செங்கோட்டைச் சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்திற்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இரண்டு முறை துளையிடும்போது கடுமையான இடிபாடுகள் காரணமாக முன்னேற முடியாமல் தோல்வியடைந்தார்கள். ஆனாலும் மனம் தளராத திருச்செங்கோட்டை சேர்ந்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் நிபுணர்கள் குழு, மீண்டும் ஆராய்ந்து முன்னெச்சரிக்கை அளவீடுகளை எடுத்து, 8ஆம் நாள்வாக்கில் 54 மீட்டர் துளையை வெற்றிகரமாகப் போட்டு முடித்தார்கள்.

இரண்டு முறை தோல்விக்கு பின், மூன்றாவது முயற்சியில் வெற்றியடைந்தனர். இது அங்கிருந்தவர்களுக்கு நம்பிக்கையை அளித்தது. மேலும் 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் திருங்செங்கோடு தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்தின் வெற்றி நாடு முழுவதும் பேசுபொருளாக மாறியது.

தொழிலாளர்களை மீட்பதில் முக்கிய பங்காற்றிய தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ்

தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் (Dharani Geotech Engineers) நிறுவனத்தின் நிபுணர்கள் குழு போட்ட துளை மூலம் சுரங்கத்தில் சிக்கியிருந்த 41 தொழிலாளர்களுக்கு ஆக்ஸிஜன், மருந்துகள், உணவு உட்பட முதல் உதவி பொருட்கள் கடந்த 15 நாட்களாக வழங்கப்பட்டது.

தமிழகத்துக்கும் பெருமை சேர்த்த தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ்

சுரங்கப்பாதை விபத்து சம்பவ இடத்திற்குப் பல வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் இயந்திரங்கள் வந்தும் கூட இது போன்ற சவால் நிறைந்த பணிகளை மேற்கொள்ள தரணி ஜியோடெக் இன்ஜினியர்ஸ் நிறுவனத்திடமிருந்த மேம்படுத்தப்பட்ட டெக்னாலஜி, அதிநவீன தொழில்நுட்பம், நிபுணத்துவம் கொண்ட குழு 41 பேரின் உயிரைக் காப்பாற்றியதோடு தமிழகத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *