உங்கள் பர்ஸ் எப்போதும் பணம் நிரம்பி இருக்க வேண்டுமா? இதோ சில டிப்ஸ்..!

இன்றைய காலகட்டத்தில், ஒவ்வொரு நபரின் வாழ்க்கையிலும் பணம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பணம் நமது அன்றாட தேவைகளை பூர்த்தி செய்கிறது. அதனுடன் நம் அனைத்து ஆசைகளையும் பணத்தால் பூர்த்தி செய்துக் கொள்கிறோம். அத்தகைய பணத்தை வைக்கக்கூடிய பர்ஸை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும்? அவற்றில் எப்போதும் பணம் நிறைந்து இருக்க என்ன செய்ய வேண்டும்?  என்பது பற்றி இந்த பகுதியில் சில வாஸ்து டிப்ஸ்-கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றை தெரிந்துக் கொள்ளலாம்.

பர்ஸில் சுத்தமாக பணம் இல்லாமல் இருக்க வேண்டாம்:

உங்கள்  பர்ஸ் உங்களின் நிதி நிலை எப்படி இருக்கிறது என்பதை காட்டும். உங்களின் பர்ஸில் பணம் குறைவாகவோ அல்லது பணம் இல்லாமலோ இருந்தால் அது உங்களுக்கு எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். அதனால் உங்கள் பர்ஸில் எப்போது பணம் நிறைந்து இருக்கக்கூடியவாறு பார்த்து கொள்ளுங்கள்.

பர்ஸை சுத்தமாக வைத்திருங்கள்:

நீங்கள் நிதி நன்மைகளைப் பெற விரும்பினால், உங்கள் பர்ஸை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். குப்பைகள அல்லது கிழிந்த  பர்ஸ் உங்கள் வாழ்க்கையில் எதிர்மறையை கொண்டு வரும்.

பர்ஸில் தேவையில்லாத பொருட்களை வைக்காதீர்கள்

தேவையில்லாத பொருட்களை உங்கள் பர்ஸில் வைத்துக் கொள்ளாமல், உங்களுக்கு தேவையானதை மட்டும் வைத்துக் கொள்ளுங்கள்.

முன் பாக்கெட்டில் பர்ஸை வைக்க வேண்டும்:

பர்ஸை எப்போதும் முன் பாக்கெட்டில் வைக்க வேண்டும். இப்படிச் செய்வதால் பொருளாதார நிலை நன்றாக இருக்கும். அதிர்ஷடம் உங்களை தேடி வரும்.

கிழிந்த நோட்டுகளை பர்ஸில் வைக்காதீர்கள் :

கிழிந்த நோட்டுகளை பர்ஸில் வைக்காதீர்கள். கிழிந்த நோட்டுகளை பர்ஸில் வைத்திருப்பது எதிர்மறை ஆற்றலை ஈர்க்கும் என்று நம்பப்படுகிறது. அதனால் எப்போது உங்களின் பர்ஸில் கிழிந்த எந்த ஒரு பொருளையும் வைக்க வேண்டாம்.

விளம்பரம்

உங்கள் பர்ஸில் நாணயங்களை வைத்திருங்கள்:

உங்கள் பர்ஸில் சில நாணயங்களை வைத்திருந்தால் நல்லது. அதனால் பணத்தின் ஈர்ப்பு உங்கள் பக்கம் எப்போதும் இருக்கும். பணத்தை நீங்கள் செலவு செய்தாலும் அது மீண்டும் மீண்டும் உங்களிடம் வந்து சேரும் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது.

செல்வத்தையும் செழிப்பையும் ஈர்க்கும் லக்கி வாலட் நிறங்கள்

செல்வம் மற்றும் செழிப்புக்கு வண்ணங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்த வண்ணங்களை வாஸ்து படி பயன்படுத்தலாம்.

நீல நிறம்:

நீல நிறம் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையின் குறிகாட்டியாகும். நீல நிற பணப்பை நிதி ஸ்திரத்தன்மையையும் பாதுகாப்பையும் தருகிறது என்று நம்பப்படுகிறது.

விளம்பரம்

பச்சை நிறம்:

பச்சை நிறம் நேர்மறை மற்றும் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. எனவே, நீங்கள் நிதி நன்மைகளைப் பெற விரும்பினால், நீங்கள் பச்சை நிற பர்ஸைப் பயன்படுத்தலாம். பச்சை நிற பர்ஸ் செல்வத்தையும் வெற்றியையும் அள்ளித் தரும்.

பழுப்பு நிறம்:

பழுப்பு நிறம் பூமியின் தனிமத்தைக் குறிக்கிறது. இது உங்கள் பணத்தை செலவாகாமல் அப்படியே பராமரிக்கவும், உங்கள் வருமானம் மற்றும் செலவினங்களுக்கு இடையே சமநிலையை பராமரிக்கவும் உதவும்.

மஞ்சள் நிறம்:

மஞ்சள் நிறம் செழிப்பின் சின்னமாக கருதப்படுகிறது. இந்த நிறம் மகிழ்ச்சி மற்றும் நேர்மறையுடன் தொடர்புடையது. இது உங்கள் பணப்பைக்கு ஏற்ற நிறமாக கருதப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *