ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரத்தை நீண்ட காலமாக நன்கு அறிந்தவன், அவர் எடுக்கின்ற முயற்சிகளை நேர்த்தியாக அதே நேரத்தில் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்கின்ற நன்மதிப்பை பெற்றவர். அவரது நிறுவனம் பல மாநிலங்களில் பணிகளை மேற்கொண்டு வருகிறது.
மதுரையில் வசிக்கும் உங்கள் காலடியில் நாங்கள் இருக்கிறோம். இந்த புறவழிச் சாலை பணியினையும் குறிப்பிட்ட காலத்திற்குள் முடிக்க வேண்டும்” என அங்கிருந்த ஒப்பந்ததாரர் மீனாட்சி சுந்தரத்தை பார்த்துப் பேச அவரும் எழுந்து வணங்கினார்.
தமிழ்நாட்டில் அமைச்சர்களுக்கு நெருக்கமானவர்கள் ஒப்பந்தராரராக உருவாகிவிட்டார்கள் என்று சொல்லப்படும் நிலையில் அமைச்சர் பெரியகருப்பன் ஒப்பந்ததாரை வெளிப்படையாக புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.