இலந்தைப்பழத் தொக்கு

தேவையானவை:

இலந்தைப்பழம் – 200 கிராம்,
எண்ணெய் – தேவைக்கேற்ப,
உப்பு – தேவைக்கு,
கடுகு – 1/2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் – 1/4 டீஸ்பூன்,
மிளகாய்ப்பொடி – 2 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி – 1/4 டீஸ்பூன்,
வறுத்து பொடி செய்த வெந்தயத்தூள் – 1/2 டீஸ்பூன்,
வெல்லம் – 50 கிராம்.

செய்முறை:

இலந்தைப் பழத்தை நன்றாக அலம்பி, உள்ளே உள்ளக் கொட்டைகளை அகற்றி, சதையை மிக்ஸியில் விழுதாக அரைக்கவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி அடுப்பில் வைத்து காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் அரைத்த இலந்தைப்பழ விழுதைப் போட்டு, அதனுடன் மிளகாய்ப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி வறுத்துப் பொடி செய்த வெந்தயம் இவற்றைப் போட்டு, பின் வெல்லத்தையும் சேர்த்து நன்றாக வதக்கி இறக்கவும். ‘இலந்ைதப்பழத்தொக்கு ரெடி. 10 நாடகள் ஆனாலும் கெடாது. இதில் புளிப்பு, காரம், இனிப்பு, உப்பு ஆகியவை கலந்து உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *