இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 8,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்

இலங்கையில் கடந்த 6 நாட்களில் மோசமான காலநிலை காரணமாக 8,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) புதன்கிழமை வெளியிட்ட சமீபத்திய புள்ளிவிபரம் தெரிவித்துள்ளது.

திடீர் வெள்ளம், அதிக காற்று, கடும் மழை மற்றும் மின்னல் போன்ற அனர்த்தங்களினால் 2,394 குடும்பங்களைச் சேர்ந்த 8,196 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக DMC தெரிவித்துள்ளது.

புதன்கிழமை, வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைப்பதற்கு போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு திணைக்களம் பொதுமக்களிடம் கோரியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *