இன்று முதல் மலிவான விலையில் முட்டை!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தின் சில இடங்களில் இன்று (28) முதல் 55 ரூபாவுக்கு முட்டைகளை விற்பனை செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

முட்டை விலையானது, நுகர்வோரால் தாங்கிக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக, முட்டையை குறைந்த விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், அமைச்சர் மஹிந்த அமரவீரவுடன் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலில், முட்டை உற்பத்தியாளர்கள் தெரிவித்த இணக்கப்பாட்டுக்கமைய, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 20 சிறிய ரக பாரவூர்திகளைப் பயன்படுத்தி, இன்றைய தினம், கொழும்பு நகரின் பல பாகங்களிலும், கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளிலும், முட்டைகளை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இன்று முதல், 20 சிறிய ரக பாரவூர்திகளில், கொழும்புக்கு நான்கரை இலட்சம் முட்டைகள் கொண்டு செல்லப்பட உள்ளதாக, அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் ஆர். எம். சரத் ​​ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நுகர்வோருக்கு, 25 முதல் 50 முட்டைகள், உணவகங்களுக்கு, 100 முதல் 200 முட்டைகள், விநியோகிக்கப்பட உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *