இன்னொரு 1962 யுத்தமா? சீனா வாலாட்டினா பதிலடி ரெடி… அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு வார்னிங் | Arunachal Pradesh Chief Minister Pema Khandu warns to china No 1962 war anymore

India

oi-Mathivanan Maran

Google Oneindia Tamil News

இடாநகர்: 1962-ம் ஆண்டு போல் இந்தியா-சீனா யுத்தம் நிகழாது; அப்படியும் சீனா இந்திய பகுதிகளை ஆக்கிரமிக்க முயற்சித்தால் கடும் பதிலடி கிடைக்கும் என அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு எச்சரித்துள்ளார்.

அருணாச்சல பிரதேசத்தை தமது நாட்டின் ஒரு பகுதியாக உரிமை கொண்டாடுகிறது சீனா. இதனை நமது நாடு மிக கடுமையாக தொடர்ந்து எதிர்த்து வருகிறது.

Arunachal Pradesh Chief Minister Pema Khandu warns to china No 1962 war anymore

இந்நிலையில் அருணாச்சல பிரதேசத்தின் தவாங் செக்டாரில் கடந்த டிசமப்ர் 9-ந் தேதி சீன ராணுவம் ஊடுருவ முயற்சித்தது. 300க்கும் மேற்பட்ட சீன ராணுவத்தினர் இந்திய பகுதியை ஆக்கிரமிக்க முயன்றனர்.

இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து நிறுத்தி விரட்டி அடித்தனர். ராணுவத்தினர் சீக்கிய, ஜாட் ரெஜிமெண்ட் வீரர்கள் தீரமுடன் போராடி சீன வீரர்களை விரட்டியடித்தனர். இதில் இந்திய வீரர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன. இச்சம்பவம் தொடர்பாக நாடாளுமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்திய தரப்பில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை; இந்திய வீரர்களுக்கு படுகாயமும் ஏற்படவில்லை என்றார்.

அருணாச்சலில் கிடைத்த தர்மஅடி.. இரவோடு இரவாக இந்திய பெருங்கடலிலிருந்து அருணாச்சலில் கிடைத்த தர்மஅடி.. இரவோடு இரவாக இந்திய பெருங்கடலிலிருந்து

அருணாச்சல பிரதேச முதல்வர் பெமா காண்டு இந்த ஊடுருவல் தொடர்பாக கூறியதாவது: தற்போதைய எல்லை நிலவரமும் 1962-ம் ஆண்டு யுத்த காலமும் ஒன்றானது அல்ல. 1962-ம் ஆண்டு யுத்த காலத்தில் பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது.

ஆனால் இப்போது சீனா எல்லை தாண்டி ஊடுருவ முயற்சித்தால் தக்க பதிலடி தரப்படும். அருணாச்சல பிரதேசத்தில் கடந்த 8 ஆண்டுகளில் ஏராளமான வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நமது ராணுவமும் எல்லையில் வலிமைப்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பெமா காண்டு கூறினார்.

English summary

Arunachal Pradesh Chief Minister Pema Khandu has warned to china No 1962 war anymore.

Story first published: Thursday, December 15, 2022, 8:55 [IST]

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *