இன்னும் 5 நாள்தான்… மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற கோரி தேவாலயங்களில் கூட்டு பிரார்த்தனை!

ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்தி அம்மாநில தேவாலயங்களில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. டெல்லியில் முகாமிட்டுள்ள மிசோரம் என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகள் நாளை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்த உள்ளனர். மிசோரம் மாநிலத்தின் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர்

ஐஸ்வால்: மிசோரம் சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்தி அம்மாநில தேவாலயங்களில் நேற்று கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. டெல்லியில் முகாமிட்டுள்ள மிசோரம் என்.ஜி.ஓ.க்களின் பிரதிநிதிகள் நாளை இந்திய தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து வாக்கு எண்ணிக்கை தேதியை மாற்ற வலியுறுத்த உள்ளனர்.

மிசோரம் மாநிலத்தின் 40 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவம்பர் 7-ந் தேதி பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பதிவு நடைபெற்றது. இத்தேர்தலில் சுமார் 80% வாக்குகள் பதிவாகின.

மிசோரம் உள்ளிட்ட 5 மாநிலா தேர்தல் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3-ந் தேதி நடைபெறும் என ஏற்கனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன

ஆனால் மிசோரம் மாநிலத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள்,என்ஜிஓ அமைப்புகள், டிசம்பர் 3-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை, கிறிஸ்தவர்களின் புனித நாள். அன்றைய தினம் வாக்கு எண்ணிக்கையை நடத்தாமல் வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.

இருந்த போதும் இதுவரை தேர்தல் ஆணையம், டிசம்பர் 3-ந் தேதிதான் வாக்கு எண்ணிக்கை என்பதில் உறுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து மிசோரம் மாநில என்.ஜி.ஓக்களின் கூட்டமைப்பு பிரதிநிதிகள் டெல்லியில் முகாமிட்டுள்ளனர். இந்த பிரதிநிதிகள் நாளை தேர்தல் ஆணைய அதிகாரிகளை சந்தித்து தங்களது கோரிக்கையை வலியுறுத்த உள்ளனர்.

இதனிடையே மிசோரம் மாநிலத்தின் 15-க்கும் மேற்பட்ட தேவாலயங்களின் கூட்டமைப்பு நேற்று ஞாயிற்றுக்கிழமையன்று சிறப்பு பிரார்த்தனைக் கூட்டங்களை நடத்த அழைப்பு விடுத்திருந்தது. இதனடிப்படையில் மிசோரம் மாநிலம் முழுவதும் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. டிசம்பர் 3-ந் தேதி வாக்கு எண்ணிக்கையை வேறு தேதிக்கு மாற்ற வலியுறுத்தி இந்தப் பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன.

மிசோரம் மாநிலத்தைப் பொறுத்தவரையில் ஆளும் மிசோ தேசிய முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது. இம்மாநிலத்தில் தொங்கு சட்டசபை அமைய சாத்தியம் என்கின்றன தேர்தல் கருத்து கணிப்பு முடிவுகள். இதனால் மிசோரம் தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கின்றன. இந்நிலையில் மிசோரம் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றப்படுமா? என்பது ஓரிரு நாட்களில் தெரியவரும்

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *