இந்திய நலனுக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும் மோடியை பணிய வைக்க முடியாது – புதின் புகழாரம்

மாஸ்கோ: இந்திய நலனுக்கு எதிரான எந்த முடிவாக இருந்தாலும் மோடியை பணிய வைக்க முடியாது என்று ரஷ்ய அதிபர் புதின் பாரட்டியுள்ளார்.

இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக ரஷ்யா உள்ளது. இந்தியா – ரஷ்யா இடையே பல்வேறு முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகி செயல்பாட்டில் உள்ளன. ஐக்கிய நாடுகள் அவை போன்ற சர்வதேச மன்றங்களிலும் ரஷ்யாவுக்கு எதிரான நிலைப்பட்டை எடுக்காமல் புறக்கணித்தே வருகிறது. குறிப்பாக உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த விவகாரத்தில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ரஷ்யாவுக்கு எதிராக தீர்மானங்கள் கொண்டு வந்தன.

இந்த தீர்மானத்தின் மீது ரஷ்யாவுக்கு எதிராக இந்தியா வாக்களிக்காமல் நடுநிலையே வகித்தது. சமீப காலமாக சீனாவுடன் ரஷ்யா நெருக்கம் காட்டி வந்தாலும் இந்தியா உடனான நட்பையும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று கூறி வருகிறது. பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதினுக்கும் இடையே தனிப்பட்ட முறையிலும் நல்ல நட்புறவை சந்திப்பின் போது வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்தநிலையில் தான், பிரதமர் மோடி தனது தேசத்தின் நலனை பாதுகாக்க கடுமையான நிலைப்பாட்டை எடுக்கிறார் என்று ரஷ்ய அதிபர் புதின் பாராட்டி பேசியுள்ளார். ரஷ்ய அதிபர் புதின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தேசத்தின் நலனுக்கு எதிரான முடிவை எடுக்குமாறு பிரதமர் மோடியை அச்சுறுத்தவோ மிரட்டவோ முடியும் என்று என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.

மோடிக்கு எதிராக அத்தகைய அழுத்தம் இருக்கிறது என்பதையும் நான் அறிவேன். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் தேசநலனை காக்கும் விஷயத்திலும், இந்திய மக்களை காக்கும் விவகாரத்திலும் சில நேரம் மோடி எடுக்கும் கடுமையான நிலைப்பாட்டை பார்த்து வியந்து இருக்கிறேன். ரஷ்யா – இந்தியா இடையேயான உறவு அனைத்து கோணங்களிலும் மேம்பட்டு வருகிறது. இதற்கு பிரதமர் மோடியின் கொள்கை உத்தரவாதமே காரணம்” என்றார்.

முன்னதாக கடந்த மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டிலும் இந்தியவை ரஷ்யா வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் பாராட்டி பேசினார். இது குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் கூறுகையில், “ஜி20 நாடுகளின் தலைமை ஏற்ற இந்தியா ஆக்கப்பூர்வமான பணிகளை ஆற்றியது. இதன் மூலம் செப்டம்பர் மாதம் நடைபெற்ற உச்சு மநாட்டில் நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டன” என்று கூறியிருந்தார். முன்னதாக விரைவில் பிரதமர் மோடி – ரஷ்ய அதிபர் புதின் இடையேயான சந்திப்பை ஏற்பாடு செய்வதற்கு இரு நாடுகளும் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *