இந்தியா Vs வங்கதேசம்: 2வது டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக லியோனல் மெஸ்ஸியின் அர்ஜென்டினா ஜெர்சி அணிந்து ரயிலில் பயணித்த ஷகிப் அல் ஹசன் படத்தைப் பார்க்கவும்
இந்தியா-வங்கதேசம் இடையேயான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டம் 22ம் தேதி தொடங்குகிறது. மூன்று ஒரு நாள் ஆட்டங்கள் தொடரில் வங்கதேச அணி 2-1 என்ற கணக்கில் வென்றது.

கடைசி ஒரு நாள் ஆட்டத்தில் மட்டும் இந்தியா ஆறுதல் வெற்றி அடைந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 14ம் தேதி தொடங்கி நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில் இந்தியா 188 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது.

இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட் ஆட்டம் 22ம் தேதி டாக்காவில் தொடங்குகிறது. இந்த ஆட்டத்திற்கான வலைப்பயிற்சியில் இரு அணி வீரர்களும் ஈடுபட்டு வருகின்றனர். வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் ஷாகிப் அல் ஹசன் அர்ஜென்டீனா கால்பந்து அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அணியும் 10 எண் கொண்ட ஜெர்ஸியை அணிந்து பயிற்சியில் ஈடுபட்டார்.

நம்பர் 1 ஆல்-ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன், சக வீரர்களுடன் டாக்கா மைதானத்தில் கால்பந்து விளையாடினார். அப்போதுதான் இந்த ஜெர்ஸியை அணிந்திருந்தார். ஷாகிப் அல் ஹசன், அர்ஜென்டீனா அணியின் தீவிர ரசிகர் ஆவார். மெஸ்ஸி என்றால் அவருக்கு கொள்ளை பிரியம். பிபா உலகக் கோப்பையை அர்ஜென்டீனா வென்றதும் அவர் மெஸ்ஸி பெயர் மற்றும் 10ம் நம்பர் எண் பதித்த ஜெர்ஸியை அணிந்தபடி வெளியிலும் காரில் வலம் வந்தார்.

பெரும் எதிர்பார்புகளுக்கு மத்தியில் கத்தாரில் பரபரப்பாக நடைபெற்ற கால்பந்தாட்ட உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில், பெனால்டி ஷூட் அவுட் முறையில் பிரான்சை வீழ்த்தி அர்ஜெண்டினா அணி மூன்றாவது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது.

உலக அளவில் கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்ட மெஸ்ஸி தனது கடைசி உலகக்கோப்பை தொடரிலாவது கோப்பையை கைப்பற்றுவாரா என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், விறுவிறுப்பான போட்டியில் சிறப்பான பங்களிப்பு அளித்து கோப்பையை கைப்பற்றி மெஸ்ஸி. மைதானத்தில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோரும், தொலைக்காட்சி மற்றும் இணையம் மூலமாக கோடிக்கணக்கான ரசிகர்களும் இந்த போட்டியை கண்டு களித்தனர்.

போட்டியில் வெற்றி பெற்றதை தொடர்ந்து கால்பந்தாட்ட உலகக்கோப்பையை தனது கையில் ஏந்தியதை போன்ற, புகைப்படத்தை மெஸ்ஸி இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். மெஸ்ஸியின் நீண்ட நாள் கனவை பறைசாற்றும் விதமாக அமந்த அந்த புகைப்படத்திற்கு ரசிகர்களிடமிருந்து லைக்குகள் குவிய, இன்ஸ்டாகிராமில் புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. அதன்படி, 5 கோடியே 73 லட்சத்திற்கும் அதிகமானோர் லைக் செய்ததன் மூலம்,  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிக லைக்குகளை பெற்ற பதிவு என்ற பெருமையை பெற்றுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *