இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தைப் பெறப் போகும் மாநிலம் இது தானாம்!

ஆந்திரப்பிரதேச மாநிலத்தின் கர்னூல், பிரகாசம், குண்டூர், நல்கொண்டா மற்றும் மகபூப் நகர் ஆகிய ஐந்து மாவட்டங்களில் அமைந்துள்ள நாகார்ஜுன்சாகர்-ஸ்ரீசைலம் புலிகள் காப்பகம் தான் இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகமாக இருந்து வந்தது. ஆனால் இப்போது, மத்தியப் பிரதேசத்தின் டாமோ மாவட்டம் நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகத்தைப் பெற உள்ளது. இனி இது தான் இந்தியாவின் மிகப்பெரிய புலிகள்

இந்தியாவின் மிகப்பெரிய புலிகள் காப்பகம்

மத்திய பிரதேசத்தில் உள்ள இரண்டு வனவிலங்கு சரணாலயங்களை ஒன்றிணைத்து 2,300 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் நாட்டின் மிகப்பெரிய புலிகள் காப்பகம் உருவாகவிருக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் உள்ள சாகர், தாமோ, நரசிங்பூர் மற்றும் ரைசென் மாவட்டங்களின் பகுதிகளை உள்ளடக்கிய நௌரதேஹி வனவிலங்கு சரணாலயத்தை, தாமோ மாவட்டத்தில் உள்ள ராணி துர்காவதி வனவிலங்கு சரணாலயத்துடன் இணைக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

பாதுகாப்பான புகலிடத்தை வழங்க முடிவு

புதிய புலிகள் காப்பகம், தற்போது 16-ஆக இருக்கும் புலிகளின் எண்ணிக்கைக்கு பாதுகாப்பான புகலிடத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், இப்பகுதியில் சுற்றுலா மற்றும் மேம்பாட்டையும் அதிகரிக்கும் என்று டாமோவின் வனப் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார். அடுத்த இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்குள் புதிய புலிகள் காப்பகத்தை செயல்பட வைப்பதற்கான திட்டத்தில் திணைக்களம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

அதிகரிக்கப்போகும் புலிகளின் எண்ணிக்கை

இரண்டு சரணாலயங்களின் இணைப்பு ஒரு காந்தமாக செயல்படும், இது அதிக புலிகளை இப்பகுதிக்கு இழுக்க உதவும் என்றும், அதன் மூலம் பாதுகாப்பு முயற்சிகளின் அடிப்படையில் அதன் முக்கியத்துவத்தை பெருக்கும் என்றும் நம்பப்படுகிறது. இதனல் புலிகளின் எண்ணிக்கை இப்பகுதியில் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது.

உள்ளூர் பொருளாதாரம் அதிகரிக்கும்

இந்த பரந்த புலிகள் காப்பகத்தை உருவாக்குவது உள்ளூர் பொருளாதாரத்திற்கு நன்மை பயக்கும் என்பதை நிரூபிப்பது மட்டுமல்லாமல், சுற்றுலாவுக்கு ஊக்கமளிக்கும் என்று கருதுகின்றனர். புந்தேல்கண்டில் பின்தங்கிய பகுதிகளின் ஒரு பகுதியாக இருந்தாலும், தாமோவின் பெயர் நாடு தழுவிய அங்கீகாரத்தைப் பெறும், மேலும் இந்த புலிகள் காப்பகத்தை நிறுவுவது மாவட்டத்தின் வளர்ச்சி வாய்ப்புகளுக்கு மேலும் வழிவகுக்கும். இந்த நடவடிக்கை டாமோவுக்கு ஒரு குறிப்பிடத்தக்க வரமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *