இதய வார்டுக்குள் வண்டி ஓட்டிய ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதம் மட்டும் கொடுத்தது நிர்வாகம்

மதுரை : வார்டுக்குள் டாக்டர்கள் ‘ரவுண்ட்ஸ்’ வருவதை மட்டுமே இதுவரை பார்த்திருந்த மதுரை அரசு மருத்துவமனை நோயாளிகள், டூவீலரில் ஊழியர்கள் ‘ரவுண்ட்ஸ்’ வந்ததை பார்த்து ‘ஷாக்’ ஆகினர். சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன தெரியுமா. வெறும் எச்சரிக்கை மட்டும்தான்.

மதுரை அரசு மருத்துவமனையில் தினமும் 7000 புற நோயாளிகளும் 2700 பேர் உள்நோயாளியாக சிகிச்சை பெறுகின்றனர். மருத்துவமனையில் ஜெய்க்கா நிதியின் கீழ் அறுவை சிகிச்சை அரங்கு வளாகம் கட்டப்பட்டு வருகிறது.

இதற்கான கழிவுநீர் மையம் அமைப்பதற்காக வார்டு வாரியாக பள்ளம் தோண்டப்பட்டு பணி நடக்கிறது. கடந்த வாரம் தீக்காய சிகிச்சை வார்டு பள்ளம் தோண்டப்பட்டதால் ஊழியர்கள் மாற்று வழியாக பணி முடிந்து வீடு திரும்பினர்.

மருத்துவமனையில் கணக்கு அலுவலரின் கீழ் பணிபுரியும் கிளார்க், உதவியாளர் பெண்கள் 3 பேர் மட்டும் மாற்றுவழியில் செல்வதற்கு பதிலாக தீக்காய சிகிச்சை வார்டு, கண் வார்டு, இதய வார்டு (114) வழியாக டூவீலரில் சென்றனர். நர்ஸ்கள், நோயாளிகள் தடுத்தபோதும் அலட்சியப்படுத்தினர். வார்டின் இருபக்கமும் நோயாளிகள் அமர்ந்திருக்க, 3 ஊழியர்களும் அலட்சியமாக செல்லும் வீடியோ ரைவலானது.

இதுகுறித்து தினமலர் நாளிதழிலும் செய்தி வெளியானது. இதுகுறித்து விசாரித்த மருத்துவமனை நிர்வாகம், சம்பந்தப்பட்ட மூவருக்கும் எச்சரிக்கை கடிதம் மட்டும் கொடுத்துள்ளது.

டாக்டர்கள் கூறுகையில்,” நர்ஸ்கள், டாக்டர்கள் மாற்றுப்பாதையில் சென்ற நிலையில் ஊழியர்கள் 3 பேர் மட்டும் வார்டுக்குள் சென்றதற்கு மெமோ வழங்கியிருக்க வேண்டும். அலுவல் ரீதியான கடிதம் வெறும் கண்துடைப்பு” என்றனர்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *