ஆல்மண்ட் ஸ்வீட் பொட்டேடோ டோஸ்ட்

தேவையானவை :

தோல் உறிக்கப் படாத பாதாம் – 3/4 கப்,
பிரட் துண்டகள் – 4,
வட்டமாக வெட்டப்பட்டு ரோஸ்ட் செய்யப்பட்ட சர்க்கரைவள்ளிக் கிழங்கு – 2 கப்,
உப்பு – சுவைக்கு ஏற்ப,
மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன்,
சாட் மசாலா – 1/2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – 2 டீஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 1/2 டீஸ்பூன்,
கிரீன் சட்னி – 1 மேசைக்கரண்டி,
ஆலிவ் எண்ணை -1 டீஸ்பூன்,
மேயனீஸ் – 1 டீஸ்பூன்.

செய்முறை:

பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். அதேப்போல் பிரட் துண்டுகளையும் நன்கு டோஸ்ட் செய்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் பிரட் மற்றும் வறுத்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு, நறுக்கிய பாதாமினை தவிர மற்ற அனைத்தையும் ஒன்றாக சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். பிரட் துண்டுகள் மேல் சர்க்கரை வள்ளி கிழங்கு துண்டுகளை வைத்து அதன் மேல் கலந்த மசாலாக்களை பரப்பி அதன் மேல் பாதாமினை தூவி பரிமாறவும். குழந்தை விரும்பும் மிகவும் ஆரோக்கிமான மற்றும் சத்துள்ள காலை உணவு.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *