ஆல்மண்ட் அமரந்த் கபாப்

தேவையானவை :

பாதாம் பருப்பு – 1/2 கப்,
அமரந்த் பொடி – 1/2 கப்,
பாதாம் மாவு – 1/2 கப்,
நறுக்கிய இஞ்சி – 2 டீஸ்பூன்,
நறுக்கிய பூண்டு – 1 டீஸ்பூன்,
நறுக்கிய பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்,
வேகவைத்த மசித்த உருளை – 2 மேசைக்கரண்டி,
உப்பு – சுவைக்கு,
மிளகாய் தூள் – 1/2 டீஸ்பூன்,
கரம் மசாலா பவுடர் – 1/4 டீஸ்பூன்,
கொத்தமல்லி தழை – 1 மேசைக் கரண்டி,
எண்ணெய் – பொரிக்க,
நறுக்கிய ெவங்காயம் – 3 மேசைக்கரண்டி

செய்முறை:

பாதாமினை நான்கு நிமிடம் 180 டிகிரியில் மைக்ரோவேவ் அவனில் வறுக்கவும். மைக்ரோ அவன் இல்லை என்றால் சாதாரண சட்டியில் வறுக்கலாம். பிறகு ஆறியதும் மெல்லியதாக சீவிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் அமரந்த் பொடி, பாதாம் மாவு, நறுக்கிய பாதாம், நறுக்கிய இஞ்சி, நறுக்கிய பூண்டு, நறுக்கிய பச்சை மிளகாய், வேகவைத்த மசித்த உருளை, உப்பு, மிளகாய் தூள், கரம் மசாலா பவுடர், கொத்தமல்லி தழை, நறுக்கிய ெவங்காயம் அனைத்தையும் சேர்த்து நன்கு பிசைந்துக் கொள்ளவும். பிறகு சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டி வடைப் போல் தட்டி வைக்கவும். எண்ணெய் சூடானதும் பொரிக்கவும். கிரீட் சட்னியுடன் பரிமாறவும்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *