ஆப்கானிஸ்தான் அணியின் வெற்றிக்கு காரணமே ஒரு முன்னாள் இந்திய வீரர்தான்.. சச்சின் போட்ட அதிரடி ட்வீட்

இதே ஆப்கானிஸ்தான் அணி சில நாட்கள் முன்னதாக 2019 உலகக்கோப்பை சாம்பியன் இங்கிலாந்து அணியை வீழ்த்தி உலகையே திரும்பி பார்க்க வைத்தது. இந்த இரண்டு பெரிய வெற்றிகளுக்கு காரணமாக முன்னாள் இந்திய வீரர் அஜய் ஜடேஜாவை கை காட்டி இருக்கிறார் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர். 2023 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்க இந்தியா வந்த ஆப்கானிஸ்தான் அணி, ஒரு மிகப்பெரிய முடிவை எடுத்தது. இந்திய ஆடுகளங்களில் ஆட து பற்றி அதிகம் தெரிந்த நபர் ஒருவர் தேவை என்பதால் முன்னாள் இந்திய அணி கேப்டன் அஜய் ஜடேஜாவை ஆலோசகராக நியமித்தது அந்த அணி.

அதன் பின் தான் ஆடிய முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி அடைந்தாலும், வலுவான இங்கிலாந்து அணியை வீழ்த்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையும் அதிர வைத்தது ஆப்கானிஸ்தான் அணி. அப்போதே பலரும் அஜய் ஜடேஜா அந்தப் போட்டிக்கான திட்டத்தை வகுத்து கொடுத்திருப்பார் என கூறினார்கள்.

ஆனால், ஆப்கானிஸ்தான் அணியின் ஒரு உலகக்கோப்பை வெற்றி என்பது ஒரு அதிர்ஷ்டமாகக் கூட இருக்கலாம் என பலரும் கருதினர். ஆனால், தற்போது பாகிஸ்தான் அணியையும் வீழ்த்தி உலகக்கோப்பை அரை இறுதிக்கான பந்தயத்தில் நாங்களும் இருக்கிறோம் என ஆப்கானிஸ்தான் அணி உரக்கக் கூறி இருக்கிறது.

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முந்தைய உலகக்கோப்பை தொடர்களில் 2015இல் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து இருந்தது. அதுவும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரானது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் அது குறித்து ஒரு பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், களத்தில் அவர்களின் சுபாவம், விக்கெட்கள் இடையே ஆக்ரோஷமாக ஓடுவது, இவை எல்லாம் அவர்களின் கடின உழைப்பை காட்டுகிறது. இதன் பின்னணியில் அஜய் ஜடேஜாவின் யோசனைகள் இருக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தியதன் மூலம் புதிய ஆப்கானிஸ்தான் அணி உருவாகி இருப்பதை கிரிக்கெட் உலகம் குறித்து வைத்துக் கொண்டு இருக்கிறது” என சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.

ஆப்கானிஸ்தான் அணி இதற்கு முந்தைய உலகக்கோப்பை தொடர்களில் 2015இல் ஒரே ஒரு வெற்றியை மட்டுமே பதிவு செய்து இருந்தது. அதுவும் ஸ்காட்லாந்து அணிக்கு எதிரானது. ஆனால், இந்த உலகக்கோப்பை தொடரில் இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகளை வீழ்த்தி உள்ள நிலையில், சச்சின் டெண்டுல்கர் அது குறித்து ஒரு பதிவு ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டு இருக்கிறார். அந்த பதிவில், “இந்த உலகக்கோப்பையில் ஆப்கானிஸ்தான் அணியின் செயல்பாடு மிக அபாரமாக உள்ளது. பேட்டிங்கில் அவர்கள் காட்டிய ஒழுக்கம், களத்தில் அவர்களின் சுபாவம், விக்கெட்கள் இடையே ஆக்ரோஷமாக ஓடுவது, இவை எல்லாம் அவர்களின் கடின உழைப்பை காட்டுகிறது.

இதன் பின்னணியில் அஜய் ஜடேஜாவின் யோசனைகள் இருக்கும் என நம்புகிறேன். இங்கிலாந்து, பாகிஸ்தான் போன்ற அணிகளை வீழ்த்தியதன் மூலம் புதிய ஆப்கானிஸ்தான் அணி உருவாகி இருப்பதை கிரிக்கெட் உலகம் குறித்து வைத்துக் கொண்டு இருக்கிறது” என சச்சின் டெண்டுல்கர் கூறி இருக்கிறார்.

ஆதாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *