“அழுத்தமாக” “அவரால்” உச்சரிக்கப்பட்ட பெயர்.. செத்தும் கொடுத்தான் சீதக்காதி.. எவ்வளவு உண்மை!

சென்னை: பெருந்துயரம் சூழ்ந்திருக்கும் தருணம்.. தன்னெழுச்சியான மக்கள் பேரலை தலைநகர் நோக்கி திரண்டிருக்கிறது.. 2-வது நாளாக கண்ணீர் அஞ்சலியை இறுதி மரியாதையை செலுத்துகின்றனர்.

தமிழ்நாட்டு அரசியலில் ‘மாற்று அரசியல்’ என்பதை நிரூபிக்க முனைந்தவர்.. ஆகப் பெரும் ஜாம்பவான்களை அரசியல் அரங்கத்தில் அலறவிட்டவர். இத்தனை துயரிலும் அத்தனை பேரும் அப்படி வாழ்ந்த மனுசன்யா.. வாழ வைத்த மனுசன்யா என நெஞ்சார விம்மி வெடித்து சிதறுகின்றனர்.

உச்சநட்சத்திரங்கள் தொடங்கி கடைகோடி குக்கிராமத்து சாமானியன் வரை இன்னமும் கதறிக் கொண்டிருக்கின்றனர்.. காவலர்கள், தூய்மைப் பணியாளர்கள், மாற்று திறனாளிகள் என சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரும் ஓடோடி வந்து துயரைக் கொட்டுகின்றனர்.

அப்படித்தான் தலைநகரில் இருந்தும் வருகை அமைந்தது. தலைநகரின் பிரதிநிதியானவர் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த கையோடு “குறிப்பாக” அவர் பெயரை அழுத்தம் திருத்தமாக சொன்னதுதான் இப்போது ஆச்சரியமானதும் விவாதத்துக்குரியதுமாக இருக்கிறது. தலைநகர் பிரதிநிதியானவர் அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்ட ஒருவருக்காகத்தான் அரசியல் களத்தில் பல பேரங்கள் நடந்தன. ஆனால் அவர் காலத்தில் எதுவுமே கை கூடாமல் போனதுதான் துயரம்.

இப்போதைய துயரமான தருணத்தில் தலைநகர் பிரதிநிதி அழுத்தம் திருத்தமான அவரது பெயரை உச்சரித்திருப்பது, இதுவரைக்கும் அந்த மனுசர் அல்லது அவர் சார்ந்தோர் போராடிய அந்த ஒன்றுக்கான அச்சாரமாக இருக்குமோ? என்கிற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. செத்தும் கொடுத்தான் சீதக்காதி!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *