அய்யோ பாவம்.. அதிகரிக்கும் கொரோனா.. சரித்திரத்தில் முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யும் சீனா | China to import Covid19 Vaccine from Germany

சர்வதேச

ஓய்-மதிவாணன் மாறன்

புதுப்பிக்கப்பட்டது: வியாழன், டிசம்பர் 22, 2022, 17:27 [IST]

கூகுள் ஒன்இந்தியா தமிழ் செய்திகள்

பெய்ஜிங்: சீனாவில் பரவல் அதி உச்சத்தை எட்டியுள்ள நிலையில் அந்நாட்டின் சரித்திரத்தில் முதல் முறையாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்கிறதாம்.

ஒட்டுமொத்த உலக நாடுகளை கடந்த 3 ஆண்டுகளாக பேரழிவுக்கு தள்ளிவிட்டது வைரஸ். 2019-ம் ஆண்டு சீனாவின் வூஹான் மாகாணத்தில் இருந்து பரவியது இந்த வைரஸ். பல லட்சம் மக்களை காவு கொண்ட இந்த வைரஸ் பாதிப்பு கடந்த சில மாதங்களாக குறைவாக இருந்தது.

ஜெர்மனியில் இருந்து கோவிட்19 தடுப்பூசியை சீனா இறக்குமதி செய்ய உள்ளது

தற்போது சீனாவில் மீண்டும் அதிவேகமாக வைரஸ் பரவ தொடங்கிவிட்டது. அதுவும் ஒரே நேரத்தில் பலருக்கும் பரவக் கூடிய உருமாறிய வைரஸ்தான் தற்போதைய பரவலுக்கு காரணம் என கண்டறியப்பட்டுள்ளது. இந்த உருமாறிய வைரஸ், இந்தியாவிலும் பரவத் தொடங்கியிருக்கிறது.

சீனாவில் மரணங்களும் அதிகரித்துள்ளன. சீனாவின் மயானங்களில் சடலங்கள் கொத்து கொத்தாக தகனம் செய்யப்படுவதாகவும்.

இந்நிலையில் சீனாவில் இதுவரை தடுப்பூசி போட விரும்புவோர் எண்ணிக்கை இல்லாத வகையில் அதிகரித்துள்ளதாம். ஆனால் சீனாவின் கையிருப்பில் போதுமான தடுப்பூசி இல்லையாம். இதையடுத்து அதன் சரித்திரத்தில் முதல் முறையாக மருந்துகளை இறக்குமதி செய்ய சீனா உள்ளது. ஜெர்மனியில் இருந்து முதல் கட்டமாக தடுப்பூசிகளை இறக்குமதி செய்யப் போகிறதாம் சீனா. சீனாவில் 20,000 ஜேர்மனியர்கள் வசிக்கின்றனர்.

ஜெர்மனியில் இருந்து கோவிட்19 தடுப்பூசியை சீனா இறக்குமதி செய்ய உள்ளது

சீனாவின் நிலைமை குறித்து உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் கவலை தெரிவித்துள்ளார். மேலும் உலகின் பல நாடுகளில் பரவல் குறைந்து வருகிறது. ஆனால் சில நாடுகளில் வைரஸ் பாதிப்பு எண்ணிக்கை மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. சீனாவின் நிலைமை கவலை அளிக்கிறது. சீனாவில் பாதிப்பு பற்றிய விவரங்களையும் ஆய்வு தகவல்களை வழங்க வேண்டும் என கேட்டுள்ளோம்.

உண்மை சோதனை: XBB வைரஸ் மிகவும் ஆபத்தானதா?  அறிகுறியே இல்லாமல் ஆளைக் கொல்லுமா?  உண்மை என்ன? உண்மை சோதனை: XBB வைரஸ் மிகவும் ஆபத்தானதா? அறிகுறியே இல்லாமல் ஆளைக் கொல்லுமா? உண்மை என்ன?

சீனா சமூக வலைதளங்களில் கால துயரங்கள் பகிரப்பட்டு வருகின்றன. இந்த தகவல்கள் டிரெண்டிங்காகவும் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. தற்போதைய நிலையில் சீனாவில் பிஎப் 7 என்ற உருமாறிய ஓமிக்ரான் வைரஸ்தான் அதிகமாக பரவி வருகிறது. இதுதான் ஒருநாள் பாதிப்புகளையும் மரணங்களையும் அதிகரிக்க செய்கிறது. சீனாவில் அடுத்தடுத்து பண்டிகை காலங்கள் தொடர்ந்து வருவதால் இந்த எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கலாம் என்கிற அச்சம் நிலவுகிறது. இதனையே மருத்துவ வல்லுநர்களும் வெளிப்படுத்தி வருகின்றனர். அதுவும் அடுத்த 3 மாதங்களில் 3 கட்டங்களாக அதாவது 3 அலைகளாகத் தாக்கும்; பல லட்சம் பேர் மரணம் அடைவார்கள் என்கின்றனர் வல்லுநர்கள். ஒட்டுமொத்த சீனாவில் 60% பேர், உலக நாடுகளின் மக்கள் தொகையில் 10% பேர் அடுத்த 3 மாதங்களில் பாதிக்கப்படுவர் என்பது வல்லுநர்கள் எச்சரிக்கை.

இதனைத் தொடர்ந்து இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் இப்போது முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றன. தொடர்ந்து தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தல் விடுக்கப்படும். இந்தியாவில் பிரதமர் மோடியும் இன்று இது தொடர்பாக ஆலோசனை நடத்தினார். இந்திய மருத்துவ வல்லுநர்கள் முக கவசம் அணிதல், பொது இடங்களில் ஒன்று கூடுதலைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்து அறிவுறுத்தி வருகின்றனர்.

ஆங்கில சுருக்கம்

கோவிட் 19 தடுப்பூசியை ஜெர்மனியில் இருந்து சீனா இறக்குமதி செய்யும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *