“அமைதிக்கான 3 மூன்று நிபந்தனைகள் இவை!” – ஒட்டுமொத்த பாலஸ்தீனத்தையும் அழிக்க இஸ்ரேல் பிரதமர் திட்டம்

ஹமாஸின் தாக்குதலைத் தொடர்ந்து, இரண்டு மாதங்களுக்கும் மேலாக பாலஸ்தீனத்தின் காஸா நகரில் போர் தொடுத்துவருகிறது இஸ்ரேல். இஸ்ரேலின் இந்தத் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீனியர்கள் எண்ணிக்கை 21,000-ஐ நெருங்கிக்கொண்டிருக்கிறது. 50,000-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் படுகாயமடைந்திருக்கின்றனர். இந்த படுகொலைகளின் எண்ணிக்கையைக் கண்டுகொள்ளாத இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸை அழிக்கும் வரை போரை நிறுத்த முடியாது எனக் கூறிவருகிறார்.

இஸ்ரேல் - ஹமாஸ் யுத்தம்

இஸ்ரேல் – ஹமாஸ் யுத்தம்

இப்படியிருக்க, அக்டோபர் 7-ம் தேதி போர் தொடங்கிய நாள்முதல், மௌனமாக இருந்துவந்த ஹமாஸ் குழுவின் தலைவர் யாஹ்யா சின்வார் (Yahya Sinwar), இஸ்ரேலுடன் முன்னெப்போதுமில்லாத கடுமையான போரை ஹமாஸ் எதிர்கொள்வதாக முதல்முறையாகத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *