அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர்.

அமைச்சர் எ.வ.வேலுஎ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

பொதுப்பணித்துறை அமைச்சரும், திருவண்ணாமலை (தெற்கு) மாவட்ட தி.மு.க செயலாளருமான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள் மற்றும் அவருக்கு நெருக்கமானோரின் இடங்களில், இன்று காலையிலிருந்தே வருமான வரித்துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்திவருகின்றனர்.

மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (சி.ஐ.எஸ்.எஃப்) வீரர்களின் துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பில், இந்தச் சோதனை தீவிரமாக நடத்தப்பட்டுவருகிறது. அருணை இன்ஜினீயரிங் கல்லூரியும் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கிறது. திருவண்ணாமலை மாவட்டத்தில் மட்டும் சுமார் 30 இன்னோவா கார்களில் அதிகாரிகள் வந்து, தனித்தனியாகப் பிரிந்து சோதனை நடத்திவருவதாகவும் கூறப்படுகிறது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *