அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த தாக்கமும் இல்லை : சிஏஜி அறிக்கை

ஆட்சிக் காலத்தில் நீட் நுழைவுத் தேர்வை எதிர்கொள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பயிற்சிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றும், இதில் 4 கோடி ரூபாய் செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் சிஏஜி அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

சட்டப்பேரவையில் 2022ஆம் ஆண்டு வரையிலான இந்திய தணிக்கை துறை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், 2018 ஆம் ஆண்டு 52 நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  அப்போது, நீட் தேர்வில் 9 ஆயிரத்து 184 மாணவர்கள் கலந்து கொண்டதாகவும், அதில், 8 மாணவர்கள் மட்டுமே மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் 2019அம் ஆண்டும் ஒரே ஒரு மாணவர் மட்டுமே மருத்துவ படிப்பில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இது அரசு அளித்த பயிற்சி குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதை உறுதி செய்வதாக சிஏஜி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், இந்த திட்டத்தில் 4 கோடியே 27 லட்சம் ரூபாய் செலவினத்தைத் தவிர்த்திருக்கலாம் என்றும் கூறியுள்ளது.

கொரோனா காலத்தில் அரசு கல்லூரிகளில் நடந்த இணைய வகுப்புகளில் மாணவர்கள் கலந்து கொள்வதற்காக இலவச டேட்டா சிம் கார்டுகள் வழங்கும் திட்டத்தில் அதிகமான கொள்முதலால் 4 கோடியே 93 லட்சம் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு சீருடை வழங்கும் திட்டத்தை அதிகாரிகள் சரியாக கண்காணிக்காததால் அரசுக்கு 4 கோடியே 81 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டதாகவும் சிஏஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *