
கண்ணீர் சிந்திய நடிகர்
தொடர்ந்து வெற்றிகளை கொடுத்து வந்த அந்த தமாஸ் ஹீரோ திடீரென ஜாலியாக ஒரு படம் கொடுக்கலாம் என இயக்குநர் மீது பெரும் நம்பிக்கை வைத்து படம் பலத்த நஷ்டத்தை ஏற்படுத்திய நிலையில், கண்கலங்கி விட்டார் என பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னேறிய நடிகர்
இந்த நடிகருடன் போட்டி போட்டு ஜெயித்து விடலாம் என தமாஸ் ஹீரோ திட்டம் போட்ட நிலையில், நானெல்லாம் மாஸ் ஹீரோவிடமே கிளாஷ் விட்டு ஜெயித்துக் காட்டியவன் என நிரூபித்து பல இடங்கள் டாப் லிஸ்டில் முன்னேறி உள்ளார். தொடர்ந்து அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்ததன் விளைவு அந்த நடிகருக்கு ஏகப்பட்ட இடங்களில் மார்க்கெட் அதிகரித்து விட்டதாம்.

தப்பு கணக்கு
நடிகர் போட்ட தப்பு கணக்கு தான் இந்த பிரச்சனைகளுக்கு எல்லாம் காரணம் என தயாரிப்பு தரப்பு நடிகர் மீது வெறுப்பு காட்டிய நிலையில், இதற்கு மேல் அடுத்த அடியை பார்த்து வைக்க வேண்டும் என ரொம்பவே பயந்து ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து வருவதாக பேச்சுக்கள் கிளம்பி உள்ளன.

பின்னுக்கு தள்ளப்பட்டார்
லேட்டா வந்தாலும், பாக்ஸ் ஆபிஸில் லேட்டஸ்ட்டாக பல கோடிகளை பக்கவாவாக வசூல் செய்து டாப் இடத்தில் தூக்கி நிறுத்தப்பட்ட அந்த இளம் நடிகர் திடீரென அவருக்கு முன்பாக இருந்தே சினிமாவில் நல்ல படங்களை கொடுத்து நடிகர்கள் மீண்டும் கம்பேக் கொடுத்து வரும் நிலையில், பல இடங்கள் கடகடவென சென்று விட்டாராம்.

விடா முயற்சி
அதை நினைத்து கவலைப்பட்டாலும், சீக்கிரமே மீண்டும் தனது இடத்தை தரமாக பிடித்து விடுவேன் என்கிற விடா முயற்சியை நடிகர் தொடர்வதாகவும், அடுத்த படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. முன்னணி ஹீரோக்களே வெற்றி, தோல்விகளை மாற்றி சந்தித்து வரும் நிலையில், நாம மட்டும் என்ன விதிவிலக்கா என நினைத்துக் கொண்டு தன்னைத் தானே தேற்றிக் கொண்டார் என்றும் பேச்சுக்கள் புகழ்ந்து வருகின்றன.