அக்கி ரொட்டி

தேவையான பொருட்கள்:

பழைய சாதம் – 1 கப்
அரிசி மாவு – 1 கப்
வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் – 3 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் – 1/4 கப்
சீரகம் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
கொத்தமல்லி – சிறிது (பொடியாக நறுக்கியது)
எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன்
துருவிய இஞ்சி – 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் பழைய சாதத்தை கையால் நன்கு பிசைந்து கொள்ள வேண்டும். பின் அத்துடன் அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், தேங்காய், சீரகம், சுவைக்கேற்ப உப்பு, கொத்தமல்லி, இஞ்சி ஆகியவற்றை சேர்த்து, சிறிது சுடுநீரை ஊற்றி நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும். பின்பு பிசைந்த மாவை உருண்டைகளாக பிரித்துக் கொள்ள வேண்டும். பிறகு ஒரு வாழை இலையை எடுத்து, அதில் எண்ணெய் தடவி, ஒரு உருண்டையை அதன் மேல் வைத்து, தட்டையாக ரொட்டி போன்று தட்டிக் கொள்ள வேண்டும். பின் ஒரு தோசைக் கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், அதில் தட்டி வைத்துள்ள ரொட்டியைப் போட்டு எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து, முன்னும், பின்னும் பொன்னிறமாக வேக வைத்து எடுக்க வேண்டும். இதேப் போன்று அனைத்து உருண்டைகளையும் ரொட்டிகளாக தட்டி தோசைக்கல்லில் போட்டு வேக வைத்து எடுத்தால், அக்கி ரொட்டி தயார்.

Source

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *