ஃப்ரீ பஸ் டிக்கெட் வேணுமா?.. 20 முறை இப்படி செய்தால் கிடைக்கும்.. நம்மூர்லயும் கொண்டு வரலாமே! | Romania introducing Free Bus tickets If People Do 20 Squats

International

oi-Jackson Singh

Google Oneindia Tamil News

புச்சாரெஸ்ட்: 20 முறை தொடர்ச்சியாக தோப்புக்கரணம் போடுபவர்களுக்கு இலவசமாக பஸ் டிக்கெட்டை வழங்கும் நடைமுறையை ரோமானியா நாட்டில் உள்ள ஒரு நகரம் அறிமுகப்படுத்தியுள்ளது.

மக்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காகவும், உடற்பயிற்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காகவும் இப்படியொரு திட்டத்தை அந்த நகர நிர்வாகம் கொண்டு வந்திருக்கிறது.

இந்த வீடியோக்கள் இணையதளத்தில் வைரலாகி வரும் நிலையில், தங்கள் நாடுகளிலும் இதுபோன்ற திட்டங்களை அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும் என பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நெட்டிசன்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

 மறந்துபோன உடற்பயிற்சி..

மறந்துபோன உடற்பயிற்சி..

இன்றைய இயந்திரமயமான உலகில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை பெரும்பாலான மக்கள் உணர்வதில்லை. உடலில் ரத்த ஓட்டம் சீராக இருப்பதற்கும், உடல் உள்ளுறுப்புகள் நன்றாக இயங்குவதற்கும் உடற்பயிற்சி செய்வதை தவிர வேறு வழியில்லை. உடல் உழைப்பு குறைந்துவிட்டதன் காரணமாகவே, இன்று புதிய புதிய வியாதிகள் மனிதக் குலத்தை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறது. இதனிடையே, உடற்பயிற்சியின் அவசியத்தை உணர்த்தும் வகையில் ஒரு வித்தியாசமான முயற்சியை ரோமானியா நாட்டில் உள்ள ஒரு நகரம் முன்னெடுத்துள்ளது.

 ரயிலிலும், பஸ்ஸிலும் ஃப்ரீ பயணம்

ரயிலிலும், பஸ்ஸிலும் ஃப்ரீ பயணம்

ரோமானியா நாட்டில் உள்ள க்ளூஜ் நபோகா என்ற நகரத்தில் அண்மையில் பல இலவச திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, அந்த நகரில் பஸ்ஸிலும், புறநகர் ரயிலிலும் இனி மக்கள் இலவசமாக பயணம் செய்து கொள்ளலாம். ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை இருக்கிறது. சில உடற்பயிற்சிகளை செய்தால் மட்டுமே அந்த இலவச டிக்கெட்டை மக்கள் பெற முடியும்.

 20 முறை தோப்புக்கரணம்

20 முறை தோப்புக்கரணம்

க்ளூஜ் நபோகா நகரில் உள்ள ஒவ்வொரு பஸ், ரயில் நிலையங்களிலும் தானியங்கி டிக்கெட் இயந்திரம் வைக்கப்பட்டிருக்கும். இந்த டிக்கெட் இயந்திரங்களில் பணம் கொடுத்தால் டிக்கெட் வந்துவிடும். ஆனால், இலவச டிக்கெட் பெற வேண்டுமென்றால் அந்த இயந்திரத்திற்கு முன்பு நின்று 20 முறை தோப்புக்கரணம் போட வேண்டும். இதில் ஏதாவது ‘கோல்மால்’ செய்தால் டிக்கெட் கிடைக்காது. இயந்திரத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்’ (Artificial Intelligence) கேமராவானது, சரியாகவும், தொடர்ந்து 20 முறை தோப்புக்கரணம் போடுபவர்களுக்கு மட்டுமே இலவச டிக்கெட்டை வழங்கும்.

சைக்கிள் மிதித்தாலும் இலவச டிக்கெட்

சைக்கிள் மிதித்தாலும் இலவச டிக்கெட்

அதேபோல், இன்னும் சில இயந்திரங்களுக்கு முன்பு சைக்கிள் நிறுத்தப்பட்டிருக்கிறது. இந்த சைக்கிளில் ஏறி 400 மீட்டர் தூரத்துக்கு பெடலை அழுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் இறுதியில் இலவச டிக்கெட்டுகள் கிடைக்கும். இந்த திட்டம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இதுகுறித்து ஐடி நிறுவன ஊழியர் ஒருவர் கூறும் போது, “வேலைக்கு சேர்ந்த நாள் முதலாகவே உடற்பயிற்சி செய்வதை நிறுத்திவிட்டேன். அதற்கு நேரம் ஒதுக்க முடியவில்லை. இதனால் 35 வயதிலேயே எனக்கு சர்க்கரை நோய் வந்துவிட்டது. தற்போது இந்த திட்டத்தால் தோப்புக்கரணம் போடுவது, சைக்கிள் மிதிப்பது போன்ற உடற்பயிற்சிகளை தினமும் செய்கிறேன். எனது உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது” என்றார்.

English summary

Romania’s Cluj-Napoca city administration introducing new initiative that people can buy free bus, train ticket if they do 20 squats or pedalling cycle.

Story first published: Thursday, December 15, 2022, 17:23 [IST]

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *